HolyIndia.Org

திருக்கண்டியூர் ஆலய தேவாரம்

திருக்கண்டியூர் ஆலயம்
4-88-5001:
மாலினை மாலுற நின்றான் 
மலைமகள் தன்னுடைய 
பாலனைப் பான்மதி சூடியைப் 
பண்புண ரார்மதின்மேற் 
போலனைப் போர்விடை யேறியைப் 
பூந்துருத் திமகிழும் 
ஆலனை ஆதிபு ராணனை 
நானடி போற்றுவதே. 

4-88-5002:
மறியுடை யான்மழு வாளினன் 
மாமலை மங்கையோர்பால் 
குறியுடை யான்குண மொன்றறிந் 
தாரில்லை கூறிலவன் 
பொறியுடை வாளர வத்தவன் 
பூந்துருத் தியுறையும் 
அறிவுடை ஆதி புராணனை 
நானடி போற்றுவதே. 

4-88-5003:
மறுத்தவர் மும்மதில் மாயவோர் 
வெஞ்சிலை கோத்தோரம்பால் 
அறுத்தனை ஆலதன் கீழனை 
ஆல்விட முண்டதனைப் 
பொறுத்தனைப் பூதப் படையனைப் 
பூந்துருத் தியுறையும் 
நிறத்தனை நீல மிடற்றனை 
யானடி போற்றுவதே. 

4-88-5004:
உருவினை ஊழி முதல்வனை 
ஓதி நிறைந்துநின்ற 
திருவினைத் தேசம் படைத்தனைச் 
சென்றடைந் தேனுடைய 
பொருவினை யெல்லாந் துரந்தனைப் 
பூந்துருத் தியுறையுங் 
கருவினைக் கண்மூன் றுடையனை 
யானடி போற்றுவதே. 

4-88-5005:
தக்கன்றன் வேள்வி தகர்த்தவன் 
சார மதுவன்றுகோள் 
மிக்கன மும்மதில் வீயவோர் 
வெஞ்சிலை கோத்தோரம்பால் 
புக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர் 
பூந்துருத் தியுறையும் 
நக்கனை நங்கள் பிரான்றனை 
நானடி போற்றுவதே. 

4-88-5006:
அருகடை மாலையுந் தானுடை 
யான்அழ காலமைந்த 
உருவுடை மங்கையுந் தன்னொரு 
பாலுல காயுநின்றான் 
பொருபடை வேலினன் வில்லினன் 
பூந்துருத் தியுறையுந் 
திருவுடைத் தேச மதியனை 
யானடி போற்றுவதே. 

4-88-5007:
மன்றியுந் நின்ற மதிலரை 
மாய வகைகெடுக்கக் 
கன்றியுந் நின்று கடுஞ்சிலை 
வாங்கிக் கனலம்பினாற் 
பொன்றியும் போகப் புரட்டினன் 
பூந்துருத் தியுறையும் 
அன்றியுஞ் செய்த பிரான்றனை 
யானடி போற்றுவதே. 

4-88-5008:
மின்னிறம் மிக்க இடையுமை 
நங்கையோர் பான்மகிழ்ந்தான் 
என்னிற மென்றம ரர்பெரி 
யாரின்னந் தாமறியார் 
பொன்னிற மிக்க சடையவன் 
பூந்துருத் தியுறையும் 
என்னிற வெந்தை பிரான்றனை 
யானடி போற்றுவதே. 

4-88-5009:
அந்தியை நல்ல மதியினை 
யார்க்கும் அறிவரிய 
செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினை 
சென்றடைந் தேனுடைய 
புந்தியைப் புக்க அறிவினை 
பூந்துருத் தியுறையும் 
நந்தியை நங்கள் பிரான்றனை 
நானடி போற்றுவதே. 

4-88-5010:
பைக்கையும் பாந்தி விழிக்கையும் 
பாம்பு சடையிடையே 
வைக்கையும் வானிழி கங்கையும் 
மங்கை நடுக்குறவே 
மொய்க்கை அரக்கனை ய[ன்றினன் 
பூந்துருத் தியுறையும் 
மிக்கநல் வேத விகிர்தனை 
நானடி போற்றுவதே. 

5-30-5545:
கொடிகொள் செல்வ விழாக்குண லையறாக்
கடிகொள் பூம்பொழிற் கச்சிஏ கம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்
அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 

5-30-5546:
ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப்
பார்த்த னோடு படைதொடு மாகிலும்
பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த்
தீர்த்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 

5-30-5547:
மாதி னைமதித் தானொரு பாகமாக்
காத லாற்கரந் தான்சடைக் கங்கையைப்
பூத நாயகன் பூந்துருத் திந்நகர்க்
காதி சேவடிக் கீழ்நா மிருப்பதே. 

5-30-5548:
மூவ னாய்முத லாயிவ் வுலகெலாங்
காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன்
பூவின் நாயகன் பூந்துருத் திந்கர்த்
தேவன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 

5-30-5549:
செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில்
உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும்
பொன்பொ னார்செல்வப் பூந்துருத் திந்நகர்
நம்பன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 

5-30-5550:
வல்லம் பேசி வலிசெய்மூன் று{ரினைக்
கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நுறினான்
புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச்
செல்வன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 

5-30-5551:
ஒருத்த னாயுல கேழுந் தொழநின்று
பருத்த பாம்பொடு பான்மதி கங்கையும்
பொருத்த னாகிலும் பூந்துருத் திந்நகர்த்
திருத்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 

5-30-5552:
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்
கருத நின்றவர் காண்பரி தாயினான்
பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச்
சதுரன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 

5-30-5553:
செதுக றாமனத் தார்புறங் கூறினுங்
கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும்
பொதுவின் நாயகன் பூந்துருத் திந்நகர்க்
கதிபன் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 

5-30-5554:
துடித்த தோல்வலி வாளரக் கன்றனைப்
பிடித்த கைஞ்ஞெரிந் துற்றன கண்ணெலாம்
பொடிக்க வு[ன்றிய பூந்துருத் திந்நகர்ப்
படிக்கொள் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 

5-30-5555:
கொல்லை யேற்றினர் கோளர வத்தினர்
தில்லைச் சிற்றம் பலத்துறைச் செல்வனார்
தொல்லை ய[ழியர் சோற்றுத் துறையர்க்கே
வல்லை யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 

5-30-5556:
முத்தி யாக வொருதவஞ் செய்திலை
அத்தி யாலடி யார்க்கொன் றளித்திலை
தொத்து நின்றலர் சோற்றுத் துறையர்க்கே
பத்தி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 

6-43-6671:
நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை நினையாவென் னெஞ்சை நினைவித் தானைக் கல்லா தனவெல்லாங் கற்பித் தானைக் காணா தனவெல்லாங் காட்டி னானைச் சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத் தொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டு பொல்லாவென் னோய்தீர்த்த புனிதன் றன்னைப் புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 

6-43-6672:
குற்றாலங் கோகரணம் மேவி னானைக் கொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தான் றன்னை உற்றால நஞ்சுண் டொடுக்கி னானை உணராவென் னெஞ்சை உணர்வித் தானைப் பற்றாலின் கீழங் கிருந்தான் றன்னைப் பண்ணார்ந்த வீணை பயின்றான் றன்னைப் புற்றா டரவார்த்த புனிதன் றன்னைப் புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 

6-43-6673:
எனக்கென்று மினியானை எம்மான் றன்னை எழிலாரு மேகம்பம் மேயான் றன்னை மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றிய[ர் மேயான் றன்னைத் தனக்கென்றும் அடியேனை யாளாக் கொண்ட சங்கரனைச் சங்கவார் குழையான் றன்னைப் புனக்கொன்றைத் தாரணிந்த புனிதன் றன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 

6-43-6674:
வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை வெள்ளானை வந்திறைஞ்சும் வெண்காட் டானை அறியா தடியே னகப்பட் டேனை அல்லற் கடல்நின்று மேற வாங்கி நெறிதா னிதுவென்று காட்டி னானை நிச்சல் நலிபிணிகள் தீர்ப்பான் றன்னைப் பொறியா டரவார்த்த புனிதன் றன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 

6-43-6675:
மிக்கானை வெண்ணீறு சண்ணித் தானை விண்டார் புரமூன்றும் வேவ நோக்கி நக்கானை நான்மறைகள் பாடி னானை நல்லார்கள் பேணிப் பரவ நின்ற தக்கானைத் தண்டா மரைமே லண்ணல் தலைகொண்டு மாத்திரைக்கண் உலக மெல்லாம் புக்கானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 

6-43-6676:
ஆர்த்தானை வாசுகியை அரைக்கோர் கச்சா அசைத்தானை அழகாய பொன்னார் மேனிப் பூத்தானத் தான்முடியைப் பொருந்தா வண்ணம் புணர்த்தானைப் பூங்கணையான் உடலம் வேவப் பார்த்தானைப் பரிந்தானைப் பனிநீர்க் கங்கை படர்சடைமேற் பயின்றானைப் பதைப்ப யானை போர்த்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 

6-43-6677:
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவிற் பொடியாக எழிலார் கையால் உரித்தானை மதகரியை யுற்றுப் பற்றி உமையதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு சிரித்தானைச் சீரார்ந்த பூதஞ் சூழத் திருச்சடைமேற் றிங்களும் பாம்பும் நீரும் புரித்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 

6-43-6678:
வைத்தானை வானோ ருலக மெல்லாம் வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும் வித்தானை வேண்டிற்றொன் றீவான் றன்னை விண்ணவர்தம் பெருமானை வினைகள் போக உய்த்தானை ஒலிகங்கை சடைமேற் றாங்கி ஒளித்தானை ஒருபாகத் துமையோ டாங்கே பொய்த்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 

6-43-6679:
ஆண்டானை வானோ ருலக மெல்லாம் அந்நா ளறியாத தக்கன் வேள்வி மீண்டானை விண்ணவர்க ளோடுங் கூடி விரைமலர்மேல் நான்முகனும் மாலுந் தேர நீண்டானை நெருப்புருவ மானான் றன்னை நிலையிலார் மும்மதிலும் வேவ வில்லைப் பூண்டானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 

6-43-6680:
மறுத்தானை மலைகோத்தங் கெடுத்தான் றன்னை மணிமுடியோ டிருபதுதோள் நெரியக் காலால் இறுத்தானை எழுநரம்பின் இசைகேட் டானை எண்டிசைக்குங் கண்ணானான் சிரமே லொன்றை அறுத்தானை அமரர்களுக் கமுதீந் தானை யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு பொறுத்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.