HolyIndia.Org

திருப்பழவூர் ஆலய தேவாரம்

திருப்பழவூர் ஆலயம்
5-76-5988:
திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை 
உருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாங் 
கருவ னாகி முளைத்தவன் கானுரிற் 
பரம னாய பரஞ்சுடர் காண்மினே. 

5-76-5989:
பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி 
உண்டின் றேயென் றுகவன்மின் ஏழைகாள் 
கண்டு கொண்மின்நீர் கானுர் முளையினைப் 
புண்ட ரீகப் பொதும்பி லொதுங்கியே. 

5-76-5990:
தாயத் தார்தமர் நன்னிதி யென்னுமிம் 
மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல் 
காயத் தேயுளன் கானுர் முளையினை 
வாயத் தால்வணங் கீர்வினை மாயவே. 

5-76-5991:
குறியில் நின்றுண்டு கூறையி லாச்சமண் 
நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன் 
அறிய லுற்றிரேல் கானுர் முளையவன் 
செறிவு செய்திட் டிருப்பதென் சிந்தையே. 

5-76-5992:
பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை 
மெய்த்த னென்று வியந்திடேல் ஏழைகாள் 
சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானுரில் 
அத்தன் பாத மடைதல் கருமமே. 

5-76-5993:
கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன் 
செல்வ மல்கு திருக்கானு ரீசனை 
எல்லி யும்பக லும்மிசை வானவர் 
சொல்லி டீர்நுந் துயரங்கள் தீரவே. 

5-76-5994:
நீரும் பாரும் நெருப்பும் அருக்கனுங் 
காரு மாருதங் கானுர் முளைத்தவன் 
சேர்வு மொன்றறி யாது திசைதிசை 
ஓர்வு மொன்றில ரோடித் திரிவரே. 

5-76-5995:
ஓமத் தோடயன் மாலறி யாவணம் 
வீமப் பேரொளி யாய விழுப்பொருள் 
காமற் காய்ந்தவன் கானுர் முளைத்தவன் 
சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே. 

5-76-5996:
வன்னி கொன்றை எருக்கணிந் தான்மலை 
உன்னி யேசென் றெடுத்தவன் ஒண்டிறல் 
தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன் 
கன்னி மாமதிற் கானுர்க் கருத்தனே.