HolyIndia.Org

திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) ஆலய தேவாரம்

திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) ஆலயம்
2-67-2189:
துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோ ள்கள் 
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு மூகங்கைக் 
கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்த 
பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி ய[ர்பிரி யாரே. 

2-67-2190:
மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார் 
விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர் 
கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார் 
பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி ய[ர்பிரி யாரே. 

2-67-2191:
கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக ஏந்தித் 
துள்ள மிதித்துநின் றாடுந் தொழிலர் எழில்மிகு செல்வர் 
வெள்ள நகுதலை மாலை விரிசடை மேல்மிளிர் கின்ற 
பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி ய[ர்பிரி யாரே. 

2-67-2192:
ஆட லிலையம் உடையார் அருமறை தாங்கியா றங்கம் 
பாட லிலையம் உடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும் 
ஊட லிலையம் உடையார் யோகெனும் பேரொளி தாங்கி 
பீட லிலையம் உடையார் பெரும்புலி ய[ர்பிரி யாரே. 

2-67-2193:
தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக் 
காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த 
நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த 
பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி ய[ர்பிரி யாரே. 

2-67-2194:
கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண் 
முற்றி தறிதுமென் பார்கள் முதலியர் வேதபு ராணர் 
மற்றி தறிதுமென் பார்கள் மனத்திடை யார்பணி செய்யப் 
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலி ய[ர்பிரி யாரே. 

2-67-2195:
மறையுடை யாரொலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார் 
குறையுடை யார்குறை தீர்ப்பார் குழகர் அழகர் நஞ்செல்வர் 
கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார் 
பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி ய[ர்பிரி யாரே. 

2-67-2196:
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளி தாகித் 
துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமும் இன்பமுந் தோற்றி 
மறவியென் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும் 
பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி ய[ர்பிரி யாரே. 

2-67-2197:
சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும் 
நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத் 
தாருடை யார்விடை ய[ர்வார் தலைவரைந் நுற்றுப்பத் தாய 
பேருடை யார்பெரு மானார் பெரும்புலி ய[ர்பிரி யாரே. 

2-67-2198:
உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட் 
கருமை யுடையன காட்டி அருள்செயும் ஆதி முதல்வர் 
கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப் 
பெருமை யுடைப் பெருமானார் பெரும்புலி ய[ர்பிரி யாரே. 

2-67-2199:
பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலி ய[ர்ப்பெரு மானை 
நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன் 
மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி 
நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திருப் பாரே.