HolyIndia.Org

திருஅன்னியூர் ஆலய தேவாரம்

திருஅன்னியூர் ஆலயம்
1-96-1036:
மன்னி ய[ரிறை, சென்னி யார்பிறை 
அன்னி ய[ரமர், மன்னு சோதியே. 

1-96-1037:
பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னிய[ர்க் 
குழகன் சேவடி, தொழுது வாழ்மினே. 

1-96-1038:
நீதி பேணுவீர், ஆதி அன்னிய[ர்ச் 
சோதி நாமமே, ஓதி உய்ம்மினே. 

1-96-1039:
பத்த ராயினீர், அத்தர் அன்னிய[ர்ச் 
சித்தர் தாள்தொழ, முத்த ராவரே. 

1-96-1040:
நிறைவு வேண்டுவீர், அறவன் அன்னிய[ர் 
மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே. 

1-96-1041:
இன்பம் வேண்டுவீர், அன்பன் அன்னிய[ர் 
நன்பொ னென்னுமின், உம்ப ராகவே. 

1-96-1042:
அந்த ணாளர்தம், தந்தை அன்னிய[ர் 
எந்தை யேயெனப், பந்தம் நீங்குமே. 

1-96-1043:
தூர்த்த னைச்செற்ற, தீர்த்தன் அன்னிய[ர் 
ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே. 

1-96-1044:
இருவர் நாடிய, அரவன் அன்னிய[ர் 
பரவுவார் விண்ணுக், கொருவ ராவரே. 

1-96-1045:
குண்டர் தேரருக், கண்டன் அன்னிய[ர்த் 
தொண்டு ளார்வினை, விண்டு போகுமே. 

1-96-1046:
பூந்த ராய்ப்பந்தன், ஆய்ந்த பாடலால் 
வேந்தன் அன்னிய[ர், சேர்ந்து வாழ்மினே. 

5-8-5302:
பாற லைத்த படுவெண் டலையினன்
நீற லைத்தசெம் மேனியன் நேரிழை
கூற லைத்தமெய் கோளர வாட்டிய
ஆற லைத்த சடைஅன்னி ய[ரரே. 

5-8-5303:
பண்டொத் தமொழி யாளையோர் பாகமாய்
இண்டைச் செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர்
கண்டத் தன்கரி யின்னுரி போர்த்தவன்
அண்டத் தப்புறத் தான்அன்னி ய[ரரே. 

5-8-5304:
பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவை யாகத் துடைப்பவர் தம்மிடங்
குரவம் நாறுங் குழலுமை கூறராய்
அரவ மாட்டுவர் போல்அன்னி ய[ரரே. 

5-8-5305:
வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
நாதர் நீதியி னாலடி யார்தமக்
காதி யாகிநின் றார்அன்னி ய[ரரே. 

5-8-5306:
எம்பி ரான்இமை யோர்கள் தமக்கெலாம்
இன்ப ராகி இருந்தவெம் மீசனார்
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்
கன்ப ராகிநின் றார்அன்னி ய[ரரே. 

5-8-5307:
வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்
கந்த மாமலர் சூடுங் கருத்தினர்
சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர்
அந்த ணாளர்கண் டீர்அன்னி ய[ரரே. 

5-8-5308:
ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை யார்குழ லாளையோர் பாகமா
ஆனை யீருரி யார்அன்னி ய[ரரே. 

5-8-5309:
காலை போய்ப்பலி தேர்வர் கண்ணார்நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ்புறங் காடரங் காகவே
ஆலின் கீழறத் தார்அன்னி ய[ரரே. 

5-8-5310:
எரிகொள் மேனியர் என்பணிந் தின்பராய்த்
திரியு மூவெயில் தீயெழச் செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்
கரிய ராகிநின் றார்அன்னி ய[ரரே. 

5-8-5311:
வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும்
அஞ்சு மஞ்சுமோ ராறுநான் கும்மிறப்
பஞ்சின் மெல்விர லாலடர்த் தாயிழை
அஞ்ச லஞ்சலென் றார்அன்னி ய[ரரே.