HolyIndia.Org

திருநின்றியூர் ஆலய தேவாரம்

திருநின்றியூர் ஆலயம்
1-18-185:
மூசூலம்படை சுண்ணப்பொடி மூமூசாந்தஞ்சுடு நீறு 
பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக் 
காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும் 
நீலம்மலர்ப் பொய்கைநின்றி ய[ரின்நிலை யோர்க்கே. 
(மூ) சூலப்படை என்றும் பாடம். 
(மூமூ) சாத்துஞ் சுடுநீறு என்றும் பாடம். 

1-18-186:
அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார் 
நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி ய[ரில் 
நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்மூ 
பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே. 
(மூ) நயந்தானா என்றும் பாடம். 

1-18-187:
பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார 
அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை 
நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி ய[ரில் 
உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே. 

1-18-188:
பூண்டவ்வரை மார்பிற்புரி நுலன்விரி கொன்றை 
ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத் 
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில் 
ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே. 

1-18-189:
குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும் 
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி ய[ரில் 
அழலின்வலன் அங்கையது மூஏந்தியன லாடுங் 
கழலின்னோலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே. 
(மூ) எய்தி என்றும் பாடம். 

1-18-190:
மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம் 
சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த 
வீரன்மலி அழகார்பொழில் மிடையுந்திரு நின்றி 
ய[ரன்கழ லல்லாதென துள்ள முணராதே. 

1-18-191:
பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும் 
பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார் 
சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும் 
நெற்றியொரு கண்ணார்நின்றி ய[ரின்நிலை யாரே. 

1-18-192:
நல்லமலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான் 
அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய 
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி ய[ரில்நிலை யாரெஞ் 
செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே. 

1-18-193:
நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை 
அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே 
நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி ய[ரில் 
மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே. 

1-18-194:
குன்றமது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக 
நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி ய[ரை 
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன் 
குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே. 

5-23-5454:
கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலைப்
படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்
நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றிய[ர்க்
கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தரே. 

5-23-5455:
வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளை
நீதி யேகொளப் பாலது நின்றிய[ர்
வேத மோதி விளங்குவெண் தோட்டராய்க்
காதில் வெண்குழை வைத்தவெங் கள்வரே. 

5-23-5456:
புற்றி னார்அர வம்புலித் தோல்மிசைச்
சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர்
நெற்றிக் கண்ணுடை யாரமர் நின்றிய[ர்
பற்றி னாரைப்பற் றாவினைப் பாவமே. 

5-23-5457:
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் மல்கி அயலெலாம்
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றிய[ர்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே. 

5-23-5458:
சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள்
இனைய னென்றென்று மேசுவ தென்கொலோ
நினையுந் தண்வயல் சூழ்திரு நின்றிய[ர்ப்
பனையின் ஈருரி போர்த்த பரமரே. 

5-23-5459:
உரைப்பக் கேண்மின்நும் உச்சியு ளான்றனை
நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றிய[ர்
உரைப்பொற் கற்றைய ராரிவ ரோவெனிற்
திரைத்துப் பாடித் திரிதருஞ் செல்வரே. 

5-23-5460:
கன்றி ய[ர்முகில் போலுங் கருங்களி
றின்றி ஏறல னாலிது வென்கொலோ
நின்றி ய[ர்பதி யாக நிலாயவன்
வென்றி யேறுடை எங்கள் விகிர்தனே. 

5-23-5461:
நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர்
கொலைவி லாலெயில் எய்த கொடியவன்
நிலையி னார்வயல் சூழ்திரு நின்றிய[ர்
உரையி னாற்றொழு வார்வினை ஓயுமே. 

5-23-5462:
அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி ய[ரைநீ
இஞ்சி மாமதில் எய்திமை யோர்தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே. 

5-23-5463:
எளிய னாமொழி யாஇலங் கைக்கிறை
களியி னாற்கயி லாய மெடுத்தவன்
நெளிய வு[ன்ற வலானமர் நின்றிய[ர்
அளியி னாற்றொழு வார்வினை யல்குமே. 

7-19-7412:
அற்றவ னாரடி யார்தமக் 
காயிழை பங்கினராம் 
பற்றவ னாரெம் பராபர 
ரென்று பலர்விரும்பும் 
கொற்றவ னார்குறு காதவர் 
ஊர்நெடு வெஞ்சரத்தால் 
செற்றவ னார்க்கிட மாவது 
நந்திரு நின்றிய[ரே. 

7-19-7413:
வாசத்தி னார்மலர்க் கொன்றையுள் 
ளார்வடி வார்ந்தநீறு 
பூசத்தி னார்புக லிந்நகர் 
போற்றுமெம் புண்ணியத்தார் 
நேசத்தி னாலென்னை யாளுங்கொண் 
டார்நெடு மாகடல்சூழ் 
தேசத்தி னார்க்கிட மாவது 
நந்திரு நின்றிய[ரே. 

7-19-7414:
அங்கையின் மூவிலை வேலர் 
அமரர் அடிபரவச் 
சங்கையை நீங்க அருளித் 
தடங்கடல் நஞ்சமுண்டார் 
மங்கையோர் பாகர் மகிழ்ந்த 
இடம்வள மல்குபுனற் 
செங்கயல் பாயும் வயல்பொலி 
யுந்திரு நின்றிய[ரே. 

7-19-7415:
ஆறுகந் தாரங்கம் நான்மறை 
யாரெங்கு மாகியடல் 
ஏறுகந் தாரிசை ஏழுகந் 
தார்முடிக் கங்கைதன்னை 
வேறுகந் தார்விரி நுலுகந் 
தார்பரி சாந்தமதா 
நீறுகந் தாருறை யும்மிட 
மாந்திரு நின்றிய[ரே. 

7-19-7416:
வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில் 
லார்நறு நெய்தயிர்பால் 
அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி 
னாரதி கைப்பதியே 
தஞ்சங்கொண் டார்தமக் கென்றும் 
இருக்கை சரணடைந்தார் 
நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது 
நந்திரு நின்றிய[ரே. 

7-19-7417:
ஆர்த்தவர் ஆடர வம்மரை 
மேற்புலி ஈருரிவை 
போர்த்தவர் ஆனையின் தோலுடல் 
வெம்புலால் கையகலப் 
பார்த்தவ ரின்னுயிர் பார்படைத் 
தான்சிர மஞ்சிலொன்றைச் 
சேர்த்தவ ருக்குறை யும்மிட 
மாந்திரு நின்றிய[ரே. 

7-19-7418:
தலையிடை யார்பலி சென்றகந் 
தோறுந் திரிந்தசெல்வர் 
மலையுடை யாளொரு பாகம்வைத் 
தார்கல் துதைந்தநன்னீர் 
அலையுடை யார்சடை எட்டுஞ் 
சுழல அருநடஞ்செய் 
நிலையுடை யாருறை யும்மிட 
மாந்திரு நின்றிய[ரே. 

7-19-7419:
எட்டுகந் தார்திசை ஏழுகந் 
தார்எழுத் தாறுமன்பர் 
இட்டுகந் தார்மலர்ப் பூசையிச் 
சிக்கும் இறைவர்முன்னாள் 
பட்டுகும் பாரிடைக் காலனைக் 
காய்ந்து பலியிரந்தூண் 
சிட்டுகந் தார்க்கிட மாவது 
நந்திரு நின்றிய[ரே. 

7-19-7420:
காலமும் ஞாயிறு மாகிநின் 
றார்கழல் பேணவல்லார் 
சீலமுஞ் செய்கையுங் கண்டுகப் 
பாரடி போற்றிசைப்ப 
மாலொடு நான்முகன் இந்திரன் 
மந்திரத் தால்வணங்க 
நீலநஞ் சுண்டவ ருக்கிட 
மாந்திரு நின்றிய[ரே. 

7-19-7421:
வாயார் மனத்தால் நினைக்கு 
மவருக் கருந்தவத்தில் 
தூயார் சுடுபொடி யாடிய 
மேனியர் வானிலென்றும் 
மேயார் விடையுகந் தேறிய 
வித்தகர் பேர்ந்தவர்க்குச் 
சேயார் அடியார்க் கணியவர் 
ஊர்திரு நின்றிய[ரே. 

7-19-7422:
சேரும் புகழ்த்தொண்டர் செய்கை 
அறாத்திரு நின்றிய[ரிற் 
சீருஞ் சிவகதி யாயிருந் 
தானைத் திருநாவலா 
ரூரன் உரைத்த உறுதமிழ் 
பத்தும்வல் லார்வினைபோய்ப் 
பாரும் விசும்புந் தொழப்பர 
மன்னடி கூடுவரே. 

7-65-7889:
திருவும் வண்மையுந் திண்டிறல் அரசுஞ்
 சிலந்தி யார்செய்த செய்பணி கண்டு 
மருவு கோச்செங்க ணான்றனக் களித்த 
 வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன் 
பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப் 
 பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித் 
தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித் 
 திரட்டுந் தென்றிரு நின்றிய[ ரானே. 

7-65-7890:
அணிகொள் ஆடையம் பூண்மணி மாலை
 அமுது செய்தமு தம்பெறு சண்டி 
இணைகொள் ஏழெழு நுறிரு பனுவல் 
 ஈன்ற வன்றிரு நாவினுக் கரையன் 
கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற 
 காத லின்னருள் ஆதரித் தடைந்தேன் 
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ் 
 செல்வத் தென்றிரு நின்றிய[ ரானே. 

7-65-7891:
மொய்த்த சீர்முந்நுற் றறுபது வேலி 
 மூன்று நுறுவே தியரொடு நுனக்கு 
ஒத்த பொன்மணிக் கலசங்க ளேந்தி 
 ஓங்கு நின்றிய[ர் என்றுனக் களிப்பப் 
பத்தி செய்தவப் பரசுரா மற்குப் 
 பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன் 
சித்தர் வானவர் தானவர் வணங்குஞ் 
 செல்வத் தென்றிரு நின்றிய[ ரானே. 

7-65-7892:
இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம் 
 எழுந்து தன்முலைக் கலசங்க ளேந்திச் 
சுரபி பால்சொரிந் தாட்டிநின் பாதந் 
 தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப் 
பரவி உள்கிவன் பாசத்தை அறுத்துப் 
 பரம வந்துநுன் பாதத்தை அடைந்தேன் 
நிரவி நித்திலம் அத்தகு செம்பொன் 
 அளிக்குந் தென்றிரு நின்றிய[ ரானே. 

7-65-7893:
வந்தோர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
 வான நாடுநீ ஆள்கென அருளிச் 
சந்தி மூன்றிலுந் தாபரம் நிறுத்திச் 
 சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச் 
சிந்து மாமணி அணிதிருப் பொதியிற் 
 சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன் 
செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ் 
 செல்வத் தென்றிரு நின்றிய[ ரானே. 

7-65-7894:
காது பொத்தரைக் கின்னரர் உழுவை
 கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயங் 
கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக் 
 கோல ஆல்நிழற் கீழறம் பகர 
ஏதஞ் செய்தவர் எய்திய இன்பம் 
 யானுங் கேட்டுநின் இணையடி அடைந்தேன் 
நீதி வேதியர் நிறைபுகழ் உலகில் 
 நிலவு தென்றிரு நின்றிய[ ரானே. 

7-65-7895:
கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க
 நலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே 
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற 
 பெற்றி கேட்டுநின் பொற்கழல் அடைந்தேன் 
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும் 
 பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார் 
நீடு மாடங்கள் மாளிகை தோறும் 
 நிலவு தென்றிரு நின்றிய[ ரானே.