HolyIndia.Org

திருநெல்வாயில் அரத்துறை , அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர் ஆலயம்

அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருநெல்வாயில் அரத்துறை
இறைவன் பெயர் : அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்
இறைவி பெயர் : ஆனந்தநாயகி
எப்படிப் போவது : திருநெல்வாயில் ஆரத்துறை என்ற இந்த சிவஸ்தலம் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் இருந்து தென்மேற்கே 6 Km தொலைவில் உள்ளது. பெண்ணாடம் ரயில் நிலையம் சென்னை - விருத்தாசலம் - திருச்சி ரயில் பாதையில் சென்னையில் இருந்து சுமார் 235 Km தொலைவில் இருக்கிறது. தொழுதூர் - விருத
சிவஸ்தலம் பெயர் : திருநெல்வாயில் அரத்துறை
ஆலயம் பற்றி :
இத்தலம் திருவரத்துறை என்றும் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தருக்கு அரத்துறைநாதர் முத்துச் சிவிகையும், முத்துக்குடையும், முத்துச் சின்னங்களையும் வழங்கி அருளிய தலம் இதுவாகும். திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை கையால் ஞானப்பால் பெற்று பதிகம் பாடி சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடி கொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் திருயாத்திரை தொடங்கினார். சம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருடைய தந்தையார் சம்பந்தரைத் தூக்கிக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. திருதூங்காணைமாடம் சிவஸ்தலத்தை தரிசித்து திருநெல்வாயில் அரத்துறை நோக்கி செல்லும் போது தந்தை தோள்மீது எழுந்தருள்வதை விட்டு நடந்தே சென்றார். சம்பந்தர் தன் சிற்றடிகள் நோக நடந்து செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். அன்றிரவு திருநெல்வாயிலிலுள்ள அடியார்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி சம்பந்தர் கால்கள் நோகாமல் இருக்க தான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும் அவற்றை சம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டார். இதே போன்று சம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விபரங்களைக் கூறி முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டர். மறுநாள் காலை திருநெல்வாயில் அரத்துறை அடியார்கள், கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு சென்று சம்பந்தரிடம் கொடுத்து, அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து, முத்துக்குடை நிழலில் அரத்துறைநாதர் ஆலயம் அழைத்து வந்தனர். சம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது பதிகம் பாடி வணங்கினார்....திருசிற்றம்பலம்...

திருநெல்வாயில் அரத்துறை அருகில் உள்ள சிவாலயங்கள்

  • தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.49 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஎருக்கத்தம்புலியூர் ( ராஜேந்தரப்பட்டினம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.78 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமுதுகுன்றம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.53 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கூடலையாற்றூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 31.46 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பழவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 37.29 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடம்பூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 40.83 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஆப்பாடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 42.90 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமழப்பாடி (பெரம்பாலூர் மாவட்டம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 43.21 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பனந்தாள் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 43.26 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநெல்வெண்ணை ( நெய்வணை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 43.75 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.