HolyIndia.Org

திருஅஞ்சைக்களம் (ஸ்ரீவாஞ்சிகுளம்) , அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர். ஆலயம்

அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர். தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருஅஞ்சைக்களம் (ஸ்ரீவாஞ்சிகுளம்)
இறைவன் பெயர் : அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர்.
இறைவி பெயர் : உமையம்மை.
எப்படிப் போவது : சென்னை - கொச்சி இருப்புப்பாதையில் "இரிஞாலக்குடா" நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. திரிச்சூரிலிருந்து 32 கி.மீ.
சிவஸ்தலம் பெயர் : திருஅஞ்சைக்களம் (ஸ்ரீவாஞ்சிகுளம்)
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • பரசுராமர் தாயைக் கொன்ற பாவம் நீ¦ங்க வழபட்ட தலம்.

  • இங்குள்ள நடராசர், சேரமான் பெருமான் பூசித்தது.
  • வீதியின் நடுவில் உள்ளபெரிய மேடை "யானைவந்த மேடை" என்று வழங்கப்படுகிறது.
  • கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை வந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்றது வரலாறு.

சிறப்புக்கள்

  • கேரள பாணியில் அமைந்த கோயில்.

  • துவஜஸ்தம்பத்தில் அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ளன.
  • கேரள முறையைப் பின்பற்றி இத்தலத்திலும் வெடி வெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கமுண்டாம்.
  • இங்குள்ள நடராசர் பஞ்சலோகச்சிலை; இதன் கீழ் "திருவஞ்சைக் களத்து சபாபதி" என்று எழுதப்பட்டுள்ளது.
  • கிழக்கு ராஜகோபுர நுழைவாய் பக்கக்கற்சுவரில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வதுபோலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவதுபோலவும் அமைக்கப்பட்டுள்ளன. சுந்தரர், சேரமான் உருவங்களும் உள்ளன.
  • சுந்தரர் கயிலை சென்ற ஆடி, சுவாதி நன்னாளன்று ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது.
  • இங்குள்ள மரவேலைப்பாடுகள் காணத்தக்கவை.
...திருசிற்றம்பலம்...

திருஅஞ்சைக்களம் (ஸ்ரீவாஞ்சிகுளம்) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • அவிநாசி (திருப்புக்கொளியூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 158.94 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமுருகபூண்டி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 160.70 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • குற்றாலம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 184.45 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவேடகம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 196.51 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • வெஞ்சமாக்கூடல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 205.99 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பரங்குன்றம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 207.44 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பாண்டிக்கொடுமுடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 207.48 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநணா (பவானி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 211.04 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஆலவாய் (மதுரை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 211.85 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஆப்பனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 212.08 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.