HolyIndia.Org

திருவாடானை , ஆடானை நாதர், ஆதிரத்தினேசுவரர் ஆலயம்

ஆடானை நாதர், ஆதிரத்தினேசுவரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவாடானை
இறைவன் பெயர் : ஆடானை நாதர், ஆதிரத்தினேசுவரர்
இறைவி பெயர் : சிநேகவல்லி, அம்பாயி அம்மை
எப்படிப் போவது : காரைக்குடியில் இருந்து சுமார் 55 Km தொலைவில் உள்ளது. பேருந்து வசதிகள் காரைக்குடியில் இருந்து இருக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருந்து தொண்டி செல்லும் வழியில் இத்தலம் அமைந்திருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருவாடானை
ஆலயம் பற்றி :

இத்தலம் நான்கு யுகங்களிலும் இருப்பதாகவும், தேவலோகத்தில் உள்ள அமிர்தத்திலிருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் உண்டாகியது எனவும் திருவாடானை தலபுராணம் கூறுகிறது. இத்தலத்து இறைவனை வணங்குவோருக்கு முக்தி அளிப்பதால் முக்திபுரம் எனவும், சூரியன் வணங்கியதால் ஆதிரத்தினேசுவரம் எனவும், வாருணி சாபம் நீக்கியதால் ஆடானை எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

வருணனின் மகன் வாருணி ஒருமுறை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை மதிக்காமல் சென்றதால் கோபமுற்ற முனிவர், வாருணி ஆட்டுத்தலையும் யானை உடலும் பெறுமாறு சாபமிட்டார். வாருணியும் அவ்வாறே ஆக, தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க, சூரியனால் வழிபடப்பட்ட இத்தலத்து மூர்த்தியான சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார். வாருணியும் இத்தலம் வந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வணங்கி சுயரூபம் பெற்றான். வாருணி சாபம் நீக்கியதால் இத்தலத்து இறைவன் ஆடானை நாதர் என்று பெயர் பெற்றார்.

பிரம்மதேவர் கூறியபடி ஒருமுறை சூரியன் இத்தலத்திற்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி ரத்தினமயமான லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஆதியாகிய சூரியன் நீல நிறமுள்ள ரத்தினமயமான இறைவனை வழிபட்டதால் இத்தலத்து இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் பெயர் பெற்றார். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும் போது இறைவன் நீல நிறமாக காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.

சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில் 130 அடி உயரம் உள்ள 9 நிலைகளை உடைய அழகிய சுதைச் சிற்பங்களோடு கூடிய ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. நீண்ட மதில் சுவர்களும்,பெரிய வெளிப் பிரகாரமும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களை உடைய மண்டபமும் உடைய இக்கோவில் பாண்டிய நாட்டு தேவார சிவஸ்தலங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மாசி மாதத்தில் சூரியஒளி மூலவர் மற்றும் அம்பாள் மீது விழும்படி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை தோறும் இத்தலத்தில் சுக்கிர தோஷ நிவர்த்திக்காக விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள பதிகம்

...திருசிற்றம்பலம்...

திருவாடானை அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருப்புனவாயில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 18.94 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்காணப்பேர் (காளையார்கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 31.37 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்புத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 50.11 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • இராமேஸ்வரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 70.55 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பூவணம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 72.40 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகொடுங்குன்றம் ( பிரான்மலை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 73.16 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருச்சுழியல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 82.99 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஆப்பனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 88.42 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஆலவாய் (மதுரை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 88.62 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பரங்குன்றம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 93.17 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.