சிவஸ்தலம் பெயர் : | அகத்தியான்பள்ளி |
இறைவன் பெயர் : | அகத்தீஸ்வரர் |
இறைவி பெயர் : | மங்கைநாயகி அம்மை, சௌந்தரநாயகி, பாகம்ப்ரியா நாயகி |
எப்படிப் போவது : | வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 2 கி.மி. தொலைவில் இருக்கிறது. நகரப் பேருந்து வசதிகள் வேதாரண்யத்தில் இருந்து இருக்கிறது. |
சிவஸ்தலம் பெயர் : | அகத்தியான்பள்ளி |
ஆலயம் பற்றி : கைலாயத்தில் நடக்க இருக்கும் பார்வதி சிவபெருமான் திருமணம் காண தேவர்கள், முனிவர்கள் மற்றும் எல்லோரும் கூடினர். அப்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. பூமியை சமன் செய்ய இறைவன் அகத்திய முனிவர் தென்திசை செல்லும்படி பணித்தார். அகத்தியர் தனக்கு சிவன் பார்வதி திருமணத்தைக் காணும் பேறு கிடைக்கவில்லையே என்று வருந்தினார். சிவபெருமான் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளுவேன் என்று வாக்களித்தார். அகத்தியரும் புறப்பட்டு தென்திசை வந்து அகத்தியான்பள்ளி தலத்தில் ஒரு ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்கினார். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு பூஜைகள் செய்து வரலானார். இறைவன் அகத்தியருக்கு கொடுத்த வாக்கின் படி அகத்தியான்பள்ளியில் பார்வதியுடன் நடந்த தனது திருமணக் கோலத்தை காட்டி அருள் புரிந்தார். அகத்தியரருக்குக் காட்சி கொடுத்ததால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார். சிவன் பார்வதி திருமணக் கோலம் கருவறையில் சிவலிங்கத்தின் பின்னே கருவறைச் சுவரில் புடைப்புச் சிறபமாக காணப்படுகிறது. அகத்தியர் உருவச்சிலை கோவிலில் உள்ளது. இது மிகவும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிற்பமாகும். 3 நிலைகளை உடைய ராஜகோபுரம் உள்ள இத்தலத்தில் மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியும் இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது.
இக்கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து குலசேகர பாண்டியன் என்ற அரசனுக்கு இருந்த வியாதி அருகில் உள்ள வேதாரண்யம் திருத்தலத்தில் உற்சவம் நடத்தி நீங்கப் பெற்றது என்ற தகவல் தெரிய வருகிறது. ...திருசிற்றம்பலம்... |