ஆலயம் பற்றி : கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த திருக்கோவில். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் விநாயகர், நவக்கிரகம், சுப்ரமணியர் மற்றும் இறைவி வெள்வளையம்மை சந்நிதிகள் இருக்கின்றன. இத்தலத்து இறைவன் இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் என்று தலவரலாறு கூறுகிறது. பூலோகத்திற்கு சிவபூஜை செய்ய வந்த இந்திரன் மண்ணால் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தான். சிவபூஜை முடிந்ததும் சிவலிங்கத்தை இட்மாற்றி வைக்கும் வழக்கம் இந்திரனிடம் இருந்தது. இவ்வாறு இந்திரன் செய்துவர இந்திரனின் கையின் அடையாளம் சிவலிங்கத்தில் பதிந்து தழும்பாக மாறியது. இதனாலேயே இந்திரன் பூஜை செய்த இந்த சிவலிங்கத்திற்கு கைச்சின்ன நாதேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. இன்றைக்கும் சிவலிங்கத் திருமேனியில் கைவிரல் குறி இருப்பதைக் காணலாம்.
இந்த ஆலயத்தில் ஸ்ரீனிவாச பெருமானின் அழகிய திரு உருவம் உள்ளது. மேலும் ரிஷபத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கும் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் ஆகியவையும் பார்க்க வேண்டியவையாகும்....திருசிற்றம்பலம்... |