சிவஸ்தலம் பெயர் : | திருவலிவலம் |
இறைவன் பெயர் : | மனத்துனைநாதர், இருதய கமலநாதர் |
இறைவி பெயர் : | மாழையுங்கண்ணி |
எப்படிப் போவது : | திருவாரூருக்கு தென்கிழக்கே 9 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகபட்டினத்தில் இருந்து கீவளூர் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது |
சிவஸ்தலம் பெயர் : | திருவலிவலம் |
ஆலயம் பற்றி : கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும்.வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது. மூலவர் மனத்துனைநாதர் சந்நிதி கட்டுமலை மேல் அமைந்துள்ளது. ஆலயத்தைச் சுற்றி 4 புறமும் அகழி இருந்தது என்பது இத்தலத்து தேவாரப் பதிகங்கள் மூலம் அறியலாம். இத்தலத்திற்கு ஏகசக்கரபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. இவ்வாலயத்தில் உள்ள திருமால் ஏகசக்கர நாராயணப்பெருமாள் என்ற பெயருடன் காட்சி தருகிறார்....திருசிற்றம்பலம்... |