HolyIndia.Org

திருவாஞ்சியம் , வாஞ்சிநாதர், வாஞ்சி லிங்கேஸ்வரர் ஆலயம்

வாஞ்சிநாதர், வாஞ்சி லிங்கேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவாஞ்சியம்
இறைவன் பெயர் : வாஞ்சிநாதர், வாஞ்சி லிங்கேஸ்வரர்
இறைவி பெயர் : மங்களநாயகி
எப்படிப் போவது : கும்பகோணத்தில் இருந்து 14 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோனம் - நன்னிலம் வழித்தடத்தில் உள்ள அச்சுதமங்கலம் என்ற ஊரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருவாரூர், நன்னிலம் ஆகிய ஊர்களில் இருந்தும் திருவாஞ்சியம் அடைய முடியும்.
சிவஸ்தலம் பெயர் : திருவாஞ்சியம்
ஆலயம் பற்றி :

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவாஞ்சியம் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருசாய்க்காடு மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும். இவற்றில் திருவாஞ்சியம் காசியை விட 1/16 பங்கு மேலானதாக கருதப்படுகிறது. இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சியளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதாகும்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவஸ்தலங்களில் திருவாஞ்சியம் ஒன்றாகும். தன்னைப் பிரிந்த திருமகளை மீண்டும் அடைய விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் திருவாஞ்சியம் ஆகும். சுமார் 558 அடி நீளமும், 320 அடி அகலமும் உடைய இவ்வாலயம் 3 கோபுரங்களுடனும், 3 பிரகாரங்களும் இடையது. பிரதான ராஜ கோபுரம் 5 நிலைகளுடன் சுமார் 200 அடி உயரமுடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இத்தலத்தில் யமதர்மனுக்கு தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சம். தினந்தோறும் யமனுக்கும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும், தேவியும் பிரகார வலம் வந்து குபதகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியருள்கின்றனர். யமன் உலக உயிர்களைக் கொல்லும் பொருட்டு தனக்கு ஏற்படும் பாவம் தீர இங்கு இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். மரணபயம், மனக்கிலேசம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும். உட்பிரகாரத்தில் பைரவர் சந்நிதி உள்ளது. பைரவர் இங்கு யோகநிலையில் காணப்படுகிறார். பைரவர் சநிதிக்கு அடுத்து ராகு-கேது சந்நிதி இருக்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இவர்கள் உருவச்சிலையும் இக்கோவிலின் சிறப்பம்சமாகும். ராகு-கேதுவிற்கு பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறிவிடும். இத்தலத்தில் ராகு-கேதுவை வழிபடுவது திருமண தடைகளை நீக்கும் என்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

கருவறை சுற்றில் உள்ள தெற்குப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் உருவச்சிலைகள் உள்ளன. மஹாலக்ஷ்மி மற்றும் மகிஷாசுரமர்தினியின் சந்நிதிகளும் இங்குள்ளன. சிம்ம வாகனத்துடன் நின்ற நிலையில் காட்சி தரும் மகிஷாசுரமர்தினியை இராகு காலத்தில் 108 தாமரை மலர்களால் அர்ச்சிப்பது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது.

இத்தலத்திலுள்ள லக்ஷ்மி தீர்த்தம், நாக தீர்த்தம் மற்றும் சக்கர தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றன. இவை மூன்றும் முறையே லக்ஷ்மி, ஆதிசேஷன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லக்ஷ்மி தீர்த்தத்தில் ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமை நீராடுவதால் ஒருவன் தான் பிரிந்து வந்த குடும்பத்துடன் மீண்டும் சேருவான் என்றும் நாக தீர்த்தத்தில் வைகாசி மாதம் திருவோணம் நடசத்திர நாளன்று நீராடுதல் நாக தோஷத்தைப் போக்கும் என்றும் ஆவணி மாதம் ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசியில் சக்கர தீர்த்தத்தில் நீராடுதல் பிரம்மஹத்தி தோஷத்தை போக்குமென்றும் தலபுராணம் கூறுகின்றது.

...திருசிற்றம்பலம்...

திருவாஞ்சியம் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருசக்கரப்பள்ளி ( அய்யம்பேட்டை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.49 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • நன்னிலம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.53 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருதலையாலங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.40 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கொண்டீச்சரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.25 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பெருவேளூர் ( மணக்கால் ஐயம்பேட்டை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.61 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகரவீரம் (கரையுபுரம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.01 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநல்லம் ( கோனேரி ராஜபுரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.21 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவீழிமிழலை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.33 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கருவிலி கொட்டிட்டை (கருவேலி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.01 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பனையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.28 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.