HolyIndia.Org

திருதர்மபுரம் , தர்மபுரீஸ்வரர், யாழ்முறிநாதேஸ்வரர் ஆலயம்

தர்மபுரீஸ்வரர், யாழ்முறிநாதேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருதர்மபுரம்
இறைவன் பெயர் : தர்மபுரீஸ்வரர், யாழ்முறிநாதேஸ்வரர்
இறைவி பெயர் : மதுர மின்னம்மை, அபயாம்பிகரி, தேனமிர்தவல்லி
தல மரம் : வாழை
தீர்த்தம் : தரும தீர்த்தம், பிரம தீர்த்தம்.
வழிபட்டோர்: நான்முகன்
எப்படிப் போவது : இத்தலம் காரைக்கால் நகரில் அமைந்துள்ளது. திருதெளிச்சேரி என்ற பாடல் பெற்ற சிவஸ்தலமும் அருகில் இருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருதர்மபுரம்
ஆலயம் பற்றி :
தல வரலாறு இவ்வூருக்கு அருகில் உள்ள, புத்தர்கள் வசிக்கப்பெற்ற போதிமங்கைக்கு அருகில் சம்பந்தர் திருக்கூட்டத்தோரோடு வருகையில், புத்தர்கள் அவரை வலிய வாதுக்கு அழைத்து சம்பந்தரின் அடியாரிடத்துத் தோற்றனர். சிறப்புக்கள் பங்குனி மாதத்தில் 13ஆம் நாள் முதல் சூரிய பூஜைச் சிறப்பாக நடைபெறுகிறது. கோவில் மேற்கு நோக்கியது. காரைக்கால் நகரின் ஒரு பகுதியாகும்.

தல வரலாறு மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன் - தருமராஜா) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது. சிறப்புக்கள் ஞானசம்பந்தரின் யாழ்முரிப் பதிகம் பெற்ற சிறப்புடைய தலம். இத்தலத்தில்தான் திருஞான சம்பந்தரின் இசை, திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழிசையில் அடங்காமையை இறைவன் வெளிப்படுத்தினார். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலம். சுவாமி சந்நிதி முகப்பு வாயில் மேலே ஒருபுறம் சம்பந்தர் பாட, யாழ்ப்பாணர் யாழ் வாசிக்க அவர் மனைவி பக்கத்தில் நிற்பது போலவும், மறுபுறம் சம்பந்தர், யாழுடன் பாணர், அவர் மனைவி ஆகியோருடன் நிற்பதுபோலவும் சுதை வேலைப்பாடுகள் உள்ளன. அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருநள்ளாற்றிலிருந்து காரைக்கால் செல்லும் பேருந்துச் சாலையில் 2 கி. மீ. சென்று வலப்புறமாக பிரியும் (பெயர்ப் பலகை உள்ளது) பாதையில் சென்றால் இக்கோயிலை அடையலாம். கோயல் வரை வாகனங்களில் செல்லலாம்.

...திருசிற்றம்பலம்...

திருதர்மபுரம் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருதெளிச்சேரி (கோயில்பத்து ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.96 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநள்ளாறு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.04 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவேட்டக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.42 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருச்சாத்தமங்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.77 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமருகல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.63 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகோட்டாறு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.21 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • அம்பர் மாகாளம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.00 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசெங்கட்டாங்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.23 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • அம்பர் பெருந்திருக்கோவில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.97 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • ராமனதீச்சுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 13.25 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.