HolyIndia.Org

திருவலம்புரம் ( மேலப்பெரும்பள்ளம்) , வலம்புரிநாதர் ஆலயம்

வலம்புரிநாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவலம்புரம் ( மேலப்பெரும்பள்ளம்)
இறைவன் பெயர் : வலம்புரிநாதர்
இறைவி பெயர் : வடுவகிர்க்கண்ணியம்மை
தல மரம் : பனை
தீர்த்தம் : பிரம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம்.
வழிபட்டோர்: திருமால், ஏரண்ட முனிவர்.
எப்படிப் போவது : சீர்காழியில் இருந்து 16 கி.மி. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை வழியில் பூம்புகார் செல்லும் கிளைப் பாதையில் திரும்பி 2 கி.மி. சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.
சிவஸ்தலம் பெயர் : திருவலம்புரம் ( மேலப்பெரும்பள்ளம்)
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் தற்போது "மேலப்பெரும்பள்ளம்" என்று வழங்குகின்றது.

  • பூம்புகாருக்கு அதைச்சுற்றிய அகழியாக இவ்வூர் முற்காலத் திருந்தமையின் இஃது பெரும்பள்ளம் என்று பெயர் பெற்றது. கீழ்ப்புறமுள்ளது கீழப் பெரும்பள்ளம் என்றும்; மேற்புறமுள்ளது மேலப் பெரும்பள்ளம் என்றும் பெயர் வரலாயிற்று. காவிரிக்கு வலப்புறம் இருப்பதால் வலம்புரம் என்றாயிற்று.
  • இத்தலத்தில் திருமால் வழிபட்டு வலம்புரி சங்கினைப் பெற்ற தலம்.

சிறப்புக்கள்

  • ஏரண்ட முனிவர் வலஞ்சுழியில் காவிரியில் இறங்கி, இவ்வூரில் கரையேறியதாகக் கூறப்படுகிறது. இங்கு அம்முனிவருக்கு கோயிலுள்ளது.
  • இக்கோயில் மாடக் கோயிலாகும்.
  • இங்கு ஏரண்ட முனிவர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.
  • கருவறை சிற்ப வேலைப்பாடுடையது. தலப்பதிகக் கல்வெட்டுள்ளது.
  • மூலவர் - பிருதிவி (மணல்) லிங்கம்.
  • இக்கோயிலில் "பட்டினத்தாரை மன்னன் வரவேற்கும் ஐதீகவிழா " என்று ஒருவிழா நடைபெறுகிறது; அது தொடர்பாக சொல்லப்படும் செய்தி :- மன்னன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான். விளையாட்டுக்காகத் தான் இறந்து விட்டதாகப் பொய்ச் செய்தி சொல்லியனுப்பினான். அச்செய்தி கேட்ட அரசி அதிர்ச்சியுற்று இறந்தாள். மன்னனைப் பழி சூழ்ந்தது. நாடொறும் ஆயிரம் பேருக்கு உணவளித்தால் (சஹஸ்ரபோஜனம்) அதில் எவரேனும் மகான் ஒருவர் வந்து உணவுண்டால் அரண்மனை வாயிலில் உள்ள மணி ஒலிக்கும்; அப்போது பழிதீரும் என்று மன்னனுக்குச் சொல்லினர். அது கேட்ட மன்னனும் அவ்வாறே செய்வித்தான். பட்டினத்தார் ஒரு நாள் அங்கு வந்தார். உணவிடுதலையறிந்து அவ்விடம் சென்றார். அங்கிருந்தோர் அவரைப் பின்புறமாக வருமாறு சொல்ல அவரும் அவ்வாறே சென்றார். சென்றவர் அங்குக் குழியில் கஞ்சி வடிந்திருக்கக் கண்டு பசிபொறாமல் அதைத் தம் கைகளால் வாரிப் பருகினார். அவ்வளவில் மணியொலித்தது. மன்னன் ஓடிவந்து செய்தியறிந்து பட்டினத்தாரை வணங்கி வரவேற்றான்.
  • விக்கிரம சோழன் கல்வெட்டில் இத்தலம் "இராசராச வளநாட்டு ஆக்கூர் நாட்டு தலைச்சங்காட்டுத் திருவலம்புரம்" என்றும்; சுவாமி "வலம்புரி உடையார் " என்றும் அம்பாள் "தடங்கண் நாச்சியார் " என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இக்கல்வெட்டுச் செய்தி ஒன்று "பண்டைநாளில் கோயில்களுக்கு ஆண்களை விற்கும் பழக்கம் இருந்ததாக" தெரிவிக்கின்றது.

எல்லாம் வல்ல வலம்புரிநாதரை போற்றி பல சைவர்கள் பாடியுள்ளனர். இந்த கோயில் வழியாக பல அன்பர்கள் கேது கோயிலுக்கு செல்கின்றனர் ஆனால் மிக முக்கியம் வாய்ந்த முவரால் பாடல் பெற்ற நமது இறையை கானாமல் செல்வது அவர்களுக்கு கொடுப்பனை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது இந்தகோயிலுக்கு இராதாகிருட்டினன் என்பவர் மெய்காவலாகஇருகிகிறார் தினமும் சுவாமிக்கு புமாலை தொடுத்து சாமிக்கு அனிவிக்கிறார். இவருடைய வீடு கோயில் எதிர் புரம் உள்ளது. நீங்கள் இவரை தொடர்பு கொண்டால் தரிசனத்திககு வழிசெய்வார். இராதாகிருட்டினன் தொலை பேசிஎன்04364-200685 கைபேசி-91-9787709754 முகவரி வலம்புரநாதர் தெரு மேலபெரும்பள்ளம் தரங்கம்பாடி வட்டம் நாகை மாவட்டம் தமிழ்நாடு-609 107...திருசிற்றம்பலம்...

திருவலம்புரம் ( மேலப்பெரும்பள்ளம்) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருசாய்க்காடு (சாயாவனம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.90 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருதலைச்சங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.01 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருபல்லவனீச்சுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.40 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவெண்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.13 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • கீழை திருக்காட்டுப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.19 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஆக்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.67 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநனிபள்ளி (புஞ்ஜை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.80 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடையூர் மயானம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.79 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடைமுடி (கீழையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.94 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.05 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.