HolyIndia.Org

திருசெம்பொன்பள்ளி , சுவர்ணபுரீசர் ஆலயம்

சுவர்ணபுரீசர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருசெம்பொன்பள்ளி
இறைவன் பெயர் : சுவர்ணபுரீசர்
இறைவி பெயர் : மருவார் குழலியம்மை
தல மரம் : வன்னி, வில்வம்.
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், காவிரி
வழிபட்டோர்: வசிட்டர், அகத்தியர், பிரமன், திருமான், இந்திரன், குபேரன்
எப்படிப் போவது : திருஞானசம்பந்தர் - 1
சிவஸ்தலம் பெயர் : திருசெம்பொன்பள்ளி
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் செம்பனார்கோயில் என்று வழங்கப்படுகிறது.

  • இத்தலம் தாக்ஷாயணிக்கு அருள்புரிந்ததும், வீரபத்திரர் தோன்றியதுமாகிய சிறப்பினையுடையது.
  • இந்திரன் நீராடி வழிபட்டு விருத்திராசுரனை கொல்ல வச்சிராயுதம் பெற்ற தலம்.

சிறப்புக்கள்

  • இத்தலத்திற்கு இலக்குமிபுரி, இந்திரபுரி, கந்தபுரி என்ற பெயர்களுமுண்டு.
  • இக்கோயில் கோச்செங்கட் சோழனின் திருப்பணியாகும்.
  • கீழே பதினாறும் மேலே பதினாறும் இதழ்களையுடைய தாமரை போன்ற ஆவுடையாரில் மூலவர் - இலிங்கத் திருமேனி - சுயம்பு மூர்த்தமாக காட்சிதருகிறார்.
  • இங்குள்ள வட்டவடிவமான ஆவுடையார் உள்ள திருமேனி திருமாலும், சதுர வடிவுடைய ஆவுடையாருள்ள திருமேனி பிரமனாலும் பூசிக்கப்பட்டதாகும்.
  • தனியேயுள்ள தேவி சந்நிதி தெற்கு நோக்கியது; இத்தலத்திற்கு தென்மேற்கேயுள்ள பறியலூரில் தந்தையான தக்கன் செய்த வேள்விக்குச் செல்லும் கோலத்தில் மேற்கு நோக்கியிருப்பதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.
  • சித்திரை 7-ஆம் நாள் முதல் 18-ஆம் நாள் முடிய சூரிய ஒளி சுவாமி மீது படுவதாகச் சொல்லப்படுகிறது. (இந்நாட்களில் விடியற்காலையில் சூரிய வழிபாடு நடைபெறுகிறது.)
  • இக்கோயிலில் சோழர் காலத்திய ஆறு கல்வெட்டுக்கள் உள்ளன; இவை மூன்றாம் குலோத்துங்க சோழன், ராஜாதிராஜசோழ தேவர், தஞ்சை சரபோஜி மன்னர் காலத்தியவை.
  • இக்கோயிலின் அமைப்பு முறை ஜேஷ்டாதேவியின் பிரதிஷ்டை முதலியவைகளைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது இக்கோயில் கி. பி. 879 - 907 வரை அரசாண்ட முதலாம் ஆதித்த சோழன் செய்த திருப்பணியாகக் கருத இடமுண்டு என்றும் செய்தி இவ்வாலயத் தலவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இவ்வூரில் 8.2.1965- ல் தோற்றுவிக்கப்பட்ட "மணிவாசக மற்றம்" மிகச் சிறப்பாக பல தெய்வீகப் பணிகளைச் செய்து வருகிறது.
...திருசிற்றம்பலம்...

திருசெம்பொன்பள்ளி அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருப்பறியலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.42 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடைமுடி (கீழையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.68 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநனிபள்ளி (புஞ்ஜை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.02 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவிளநகர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.59 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஆக்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.97 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநின்றியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.30 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருதலைச்சங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.36 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.00 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.28 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவலம்புரம் ( மேலப்பெரும்பள்ளம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.36 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.