HolyIndia.Org

திருவிளநகர் , துறைகாட்டும் வள்ளலார், உசிரவனேஸ்வரர் ஆலயம்

துறைகாட்டும் வள்ளலார், உசிரவனேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவிளநகர்
இறைவன் பெயர் : துறைகாட்டும் வள்ளலார், உசிரவனேஸ்வரர்
இறைவி பெயர் : வேயுறு தோளியம்மை
தீர்த்தம் : மெய்ஞ்ஞான தீர்த்தம்
வழிபட்டோர்: கபித்தன் என்னும் அரசன்
எப்படிப் போவது : மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருவிளநகர்
ஆலயம் பற்றி :

சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 5 நிலை ராஜகோபுரம் கொண்டது துறை காட்டும் வள்ளலார் கோவில். இக்கோவில் 2 பிரகாரங்களைக் கொண்டது. இரண்டாவது பிரகாரத்தில் சிறிய நந்தி மண்டபமும், ஆஸ்தான மனடபமும் இருக்கின்றன. 2 வது கோபுர வாசலின் இருபுறமும் விநாயகர் காணப்படுகிறார். மூலவர் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இறைவி வேயுறுதோளியம்மை தந்து திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறாள். மேற்குப் பகுதியில் சோமஸ்கந்தர், ஆறுமுகன், அருணாசலேஸ்வரர் ஆக்யோருக்கு சந்நிதிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் நடராஜர், கிழக்கில் நவக்கிரஹ சந்நிதி, சூரியன், பைரவர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

சம்பந்தர் ஒருமுறை இத்தலத்திற்கு விஜயம் செய்ய வந்தபோது காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்து கரையிலேயே நின்று பரிதவித்தார். துறை காட்டுபவர் யாரேனும் உள்ளார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்த இவரை வேடன் ஒருவன் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சொல்லி ஆற்றில் இறங்கினான். சம்பந்தரும் அவனைப் பின்தொடர்ந்து ஆற்றில் இறங்க வெள்ளம் பிரிந்து அவர்களுக்கு வழி விட்டது. மறுகரை சேர்ந்த சம்பந்தர் நன்றி சொல்ல வேடனைத் தேட அவன் மாயமாய் மறைந்து விட்டதைக் கண்டார். இறைவனே வேடனாய் வந்து துறை காட்டியதால் அவர் துறை காட்டும் வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார். துறைகாட்டும் வள்ளல் அருள் நமக்கிருந்தால் பிறவிப் பெருங்கடலைச் சுலபமாகக் கடக்கலாம்.

தல வரலாறு அருள்வித்தகர் என்னும் அந்தணர், ஈசனுக்குப் பூக்கூடையை எடுத்துக்கொண்டு காவிரியாற்றில் வரும்போது, வெள்ளம் அவரை அடித்துச்செல்ல, இறைவன் துறை காட்டிக் கரையேற்றுவித்து, அருள்புரிந்தார். எனவே இத்தல இறைவன், இப்பெயர் பெற்றார்.இது இத் தலத் தேவாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கபித்தன் என்னும் அரசன் பூஜித்து பிரமகத்தி தோஷம் நீங்கப்பெற்றான். சிறப்புக்கள் இக் கோவில் தருமை ஆதினக் கோவிலாகும். இங்கு, மூன்று கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.

...திருசிற்றம்பலம்...

திருவிளநகர் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருப்பறியலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.65 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசெம்பொன்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.59 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநின்றியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.54 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடைமுடி (கீழையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.96 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • மயிலாடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.79 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநனிபள்ளி (புஞ்ஜை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.93 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • கிளியனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.21 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஆக்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.56 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.58 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருதலைச்சங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.67 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.