Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருவழுந்தூர் (தேரழுந்தூர் ) |
இறைவன் பெயர் : | வேதபுரீஸ்வரர் |
இறைவி பெயர் : | சௌந்தராம்பிகை |
தீர்த்தம் : | வேத தீர்த்தம் |
வழிபட்டோர்: | வேதங்கள்,தேவர்கள்,திக்குப்பாலகர்கள் |
எப்படிப் போவது : | மயிலாடுதுறையில் இருந்து 11 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. |
சிவஸ்தலம் பெயர் : | திருவழுந்தூர் (தேரழுந்தூர் ) |
ஆலயம் பற்றி : தேரழுந்தூர் என்று இன்று அறியப்படும் ஊரின் கிழக்குப் பகுதியில் வேதபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இதே ஊரின் மற்றொரு பகுதியில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான விஷ்னுவின் ஆலயமும் இருக்கிறது. இறைவி சௌந்தராம்பிகையின் சந்நிதி சிவன் கோவிலின் வெளியே தனியாக அமைந்திருக்கிறது. அகத்தியர், மார்க்கண்டேயர், காவேரி ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு மோட்சம் பெற்றிருக்கின்றனர். கம்ப இராமயணத்தை இயற்றிய தமிழ் கவிஞர் கம்பர் பிறந்த ஊர் இதுவாகும். தல வரலாறு அகத்தியர் பூஜிப்பதை அறியாது ஊர்த்துவ ரதன் என்னும் அரசன் ஆகாயத்தில் செலுத்திய தேர் செல்லாமல் அழுந்திய பதி. சிறப்புக்கள் கம்பர் பிறந்த மேடு உள்ள இடம். ஆறு கல்வெட்டுகள் உள்ளன. யாவும் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவை. ...திருசிற்றம்பலம்... |