HolyIndia.Org

திருநாகேஸ்வரம் , சண்பகாரண்யேஸ்வரர், நாகநாதர் ஆலயம்

சண்பகாரண்யேஸ்வரர், நாகநாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருநாகேஸ்வரம்
இறைவன் பெயர் : சண்பகாரண்யேஸ்வரர், நாகநாதர்
இறைவி பெயர் : கிரிகுசாம்பிகை
தல மரம் : சண்பகம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்.
வழிபட்டோர்: ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர்.
எப்படிப் போவது : கும்பகோணத்தில் இருந்து 5 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருநாகேஸ்வரத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் உப்பிலியப்பன் கோவில் என்கிற திவ்யதேசம் ஸ்தலம் உள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருநாகேஸ்வரம்
ஆலயம் பற்றி :
தல வரலாறு இப்போது மக்கள் வழக்கில் திருநாகேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது. நாகராஜாக்கள் வழிபட்ட தலமாதலின் "திருநாகேச்சுரம்" எனப் பெயர் பெற்றது. சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தநாரீசுர வடிவம் வேண்டி இத்தலத்தில் சண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்தார். ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர் வழிபட்டு பேறு பெற்றனர். சிறப்புக்கள் சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது. அவர் மிகவும் நேசித்த தலம். இதனால் தம் ஊரான குன்றத்தூரில் இப்பெயரில் ஒரு கோயிலைக் கட்டினார். இத்தலம் ராகு கிரகத்திற்குரிய தலமாதலின், இப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாகிவிடுகிறது. தலவிநாயகர் - சண்பக விநாயகர் எனப்படுகிறார். இக்கோயிலுக்கு சண்பகவனம், கிரிகின்னிகைவனம் என்பன வேறு பெயர்கள். காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம் என்பர். சேக்கிழார், அவர் தாயார், தம்பி உருவங்கள் கோயிலில் உள்ளன. கண்டராதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது. இக்கோயிலில் 16 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன; இவை கண்டராதித்த, இராஜராஜன், இராஜேந்திர சோழர் காலத்தியவையாகும். ...திருசிற்றம்பலம்...

திருநாகேஸ்வரம் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • சிவபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.27 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • அரிசிற்கரைபுத்தூர் (அழகாபுத்தூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.67 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகலயநல்லூர் (சாக்கோட்டை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.36 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவிடைமருதூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.49 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநாரையூர் (சித்தீச்சரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.87 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவியலூர் (திருவிசைநல்லூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.93 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கருக்குடி (மருதாநல்லூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.02 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகுடந்தை கீழ்கோட்டம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.59 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்குடந்தைக் காரோணம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.88 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.93 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.