ஆலயம் பற்றி :
தல வரலாறு
சிறப்புக்கள்
- (மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ள "காசி விசுவேசம்" என்னும் கோயிலைக் குடந்தைக் காரோணம் என்று சிலர் சொல்கின்றனர். இத்தலத்தில் இராமன், இராவணனை
கொல்ல ருத்ராம்சம் வேண்டி வழிபட்டு உடலில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் காய - ஆரோகணம் - காரோணம் என்று இஃது பெயர் பெற்றாலுங்கூட;) திருஞானசம்பந்தர்
பாடலில் "தேனார் மொழியாள் திளைத்தங்காடித் திகழும் குடமூக்கில், கானார் நட்டம் உடையார் செல்வக்காரோணத்தாரே " என்று குறிப்பிட்டுள்ளமையால், அம்பிகை பெயர் வழங்கும்
தலம் (சக - உமேசம்) சோமேசம் ஆதலின் இதுவே பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது-
- குடந்தைச் சிவனடியார் திருக்கூட்டத்தினர் இத்திருக்கோயிலையே குடந்தைக் காரோணமாக ஏற்றுக்கொண்டு 1958-ஆம் ஆண்டில் காரோணப் பதிகத்தைக் கல்லில் பொறித்துச்
சுவரில் பதித்துள்ளனார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
தமிகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு வருவதற்கு பேருந்து வசதி உள்ளது.
...திருசிற்றம்பலம்... |