HolyIndia.Org

திருப்பாலைத்துறை , பாலைவன நாதர் ஆலயம்

பாலைவன நாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருப்பாலைத்துறை
இறைவன் பெயர் : பாலைவன நாதர்
இறைவி பெயர் : தவளவெண்ணகையம்மை
தல மரம் : பாலை. (இப்போதில்லை)
தீர்த்தம் : வசிஷ்டதீர்த்தம், இந்திர தீர்த்தம், எம தீர்த்தம்
வழிபட்டோர்: திருமால், பிரமன், திசைப்பாலகர்கள், வசிட்டர், அருச்சுனன், தேவர்கள்
எப்படிப் போவது : பாபநாசத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பாபநாசம் வர பேருந்து வசதிகள் உண்டு.
சிவஸ்தலம் பெயர் : திருப்பாலைத்துறை
ஆலயம் பற்றி :

தல வரலாறு

 • பாண்டவர்களின் வனவாச காலத்தில், தௌமிய முனிவரின் ஆலோசனைப்படி அருச்சுனன் இத்தலத்திற்கு வந்து, வழிபட்டு, வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்று சொல்லப்படுகிறது.

 • தாருகாவனத்து முனிவர்கள், இறைவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணி, தீயவேள்வி செய்து, புலியை வரவழைத்து, அதை இறைவன் மீது ஏவ, இறைவனும் அப்புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலம்.

சிறப்புக்கள்

 • இத்தலம் பாலைவனம், பிரம்மவனம், அரசவனம், புன்னாகவனம் எனப்பல பெயர்களால் சிறப்புறப்படுகிறது.
 • வேதங்களின் நடுவணதாகிய யஜுர்வேதத்தின் நடுவின் பஞ்சாக்ஷரம் விளங்குவது போல, திருமுறைகளில் தேவாரத்துள் நடுவணதாகிய அப்பர் தேவாரத்துள், குறுந்தொகையில், நடுப்பதிகமாகிய 51-ஆவது பதிகம் இத்தலத்துப் பதிகமாகும். இப்பதிகத்தின் நடுப்பாடலாக உள்ள "விண்ணினார் பணிந்து " என்று தொடங்கும் பாடலின் நடுவில் சூட்சும பஞ்சாக்ஷரம் விளங்குகிறது. இச்சிறப்பினையுடைய (பதிகத்திற்கு) உரிய தலம் இதுவேயாகும்.
 • கோயில் கீழ்ப்பகுதி கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கற் கட்டமைப்பிலும் காணப்படுகிறது.
 • கோயிலுள் பெரிய நெற்களஞ்சியம் உள்ளது - வட்ட வடிவில் கூம்பு முனையுடன் செங்கல்லால் கட்டப்பட்டுள்ள இக்களஞ்சியம் 12 ஆயிரம் கலம் கொள்ளளவுடையது. இவ்வளவு அதிகமான நெல் வருவாயைக் கொண்டதாக இக்கோயில் விளங்கியதென்பது நமக்குத் தெரிகிறது. (தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.)
 • பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், வசிஷ்டர், மகாலட்சுமி, பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் வழிபட்ட சிவலிங்கள் உள்ளன.
 • சுவாமி, அம்பாள் இருவரும் கல்யாணத் திருக்கோலத்தில் விளங்குகின்றனர்.
 • இக்கோயிலில் முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் இராசராசன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோருடைய காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.
 • கல்வெட்டுக்களில் இவ்வூர், "நித்தவிநோத வளநாட்டு நல்லூர் நாட்டைச் சேர்ந்த ஊர் " என்றும்; இறைவன் "திருப்பாலைத்துறை மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
 • (முதற் குலோத்துங்கன் காலத்தில் இக்கோயில் கருங்கல் திருப்பணியாக ஆக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது.)

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம் - கோயில் வாயிலில் இறங்கலாம். கும்பகோணம் - தஞ்சை இருப்புப் பாதையில் பாபநாசம் நிலையத்தில் இறங்கி 1 கி. மீ. வடகிழக்கில் சென்று இத்தலத்தை அடையலாம்.
...திருசிற்றம்பலம்...

திருப்பாலைத்துறை அருகில் உள்ள சிவாலயங்கள்

 • திருநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.93 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
 • ஆவூர் பசுபதீச்சரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.95 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருவலஞ்சுழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.70 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருசத்திமுத்தம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.74 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • பட்டீச்சரம் (பட்டீஸ்வரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.89 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • பழையாறை வடதளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.71 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருக்கருகாவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.75 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருவிசயமங்கை (கோவிந்தாபுத்துர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.55 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருஇன்னாம்பர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.61 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருவைகாவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.82 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.