Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | தென்குடித்திட்டை |
இறைவன் பெயர் : | வசிஷ்டேஸ்வரர், பசுபதிநாதர், பசுபதீஸ்வரர் |
இறைவி பெயர் : | உலகநாயகி, சுகந்த குந்தளாம்பிகை, மங்களேஸ்வரி |
தல மரம் : | சண்பகம். (தற்போதில்லை.) |
தீர்த்தம் : | சூல தீர்த்தம். (இதற்கு சக்கர தீர்த்தம் என்றும் பெயர்) |
வழிபட்டோர்: | வசிட்டர், தேவர், பைரவர், முருகன், பிரமன், திருமால், காமதேனு,ஆதிசேஷன் |
எப்படிப் போவது : | தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் தஞ்சாவூரில் இருந்து 15 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள பசுபதிகோவில் என்ற ரயில் நிலையத்தில் இருந்தும் இத்தலத்தை அடையலாம். |
சிவஸ்தலம் பெயர் : | தென்குடித்திட்டை |
ஆலயம் பற்றி : காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும் தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பூலோகமே நீரில் அமிழ்ந்திருந்த போது திட்டை என்னும் இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். சம்பந்தர் சிவபெருமானை விட அவர் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் இத்தலம் மேலானது என்று குறிப்பிடுகிறார். மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு சந்திர காந்தக் கல் பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் 25 நிமிடங்களுக்கு ஒருமுறை மூலவர் சிவலிங்கத் திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டிருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். பிரம்மா, விஷ்னு, சுப்பிரமணியர், பைரவர், சூரியன், யமதர்மன், சனீஸ்வரன், தேவேந்திரன், ஆதிசேஷன், வசிஷ்டர், ஜமதக்னி முனிவர் ஆகியோர் இத்தலத்தில் வசிஷ்டேஸ்வரரை வழிபட்டுள்ளனர். ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. ராஜகோபுர வழியாக உட்சென்று சில படிகள் ஏறிச் சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். குரு பகவானின் தனி சந்நிதி முதல் பிரகாரத்தில் அமைந்துள்ளது. இவர் ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்மாநிலம் : தமிழ் நாடு தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்மாநிலம் : தமிழ் நாடு |