சிவஸ்தலம் பெயர் : | திருசோற்றுத்துறை |
இறைவன் பெயர் : | தொலையாச்செல்வர், ஓதவனேஸ்வரர் |
இறைவி பெயர் : | அண்ணபூரணி, ஒப்பிலா அம்மை |
தீர்த்தம் : | காவிரி |
வழிபட்டோர்: | இந்திரன், சூரியன், கௌதமர் |
எப்படிப் போவது : | தஞ்சாவூரில் இருந்து 13 கி.மி. தொலைவிலும், திருக்கண்டியூர் சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது. திருசோற்றுத்துறையில் இருந்து தெற்கே 3 கி.மி. தொலைவில் திருவேதிக்குடி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. |
சிவஸ்தலம் பெயர் : | திருசோற்றுத்துறை |
ஆலயம் பற்றி :
தல வரலாறு
சிறப்புக்கள்
- இது சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று.
- ஊர்ப்பெயருக்கேற்ப சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும் அடியார்களுக்கு இங்கு அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது.
- தலப் பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.
- இத்தலத்திற்குச் மேலும் சிறப்பு சேர்க்கும் மூர்த்தியாக அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது.
- தனிக்கோயிலில் அம்பாள் திருமணக்கோலமாக காட்சி தருகிறாள்.
- முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். சோழர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு அம்மன்னர்கள் விளக்கெரிக்கவும்,
நிவேதனத்திற்காகவும், விழாக்கள் எடுக்கவும் நிலமும் பொன்னும் தந்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவையாற்றிலிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
...திருசிற்றம்பலம்... |