HolyIndia.Org

திருப்பூந்துருத்தி , புஷ்பவன நாதர் ஆலயம்

புஷ்பவன நாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருப்பூந்துருத்தி
இறைவன் பெயர் : புஷ்பவன நாதர்
இறைவி பெயர் : சௌந்தர்ய நாயகி, அழகாலமர்ந்த நாயகி
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
வழிபட்டோர்: இந்திரன், திருமால், இலக்குமி, சூரியன், காசிபர்
எப்படிப் போவது : அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் திருப்பூந்துருத்தி இருக்கிறது. திருவையாற்றில் இருந்து சுமார் 7 கி.மி. தொலைவில் உள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருப்பூந்துருத்தி
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • மக்கள் வழக்கிலும் - அஞ்சல் பெயர் வழக்கிலும் தற்போது திருப்பந்துருத்தி என்று வழங்குகிறது. கோயில் உள்ளபகுதி மேலத்திருப்பூந்துருத்தியாகும்.

  • ஆற்றிடைக் குறையிலுள்ள ஊர்கள் "துருத்தி" என்று பெயர் பெறும். இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது.
  • அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலமென்றெண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சித் தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. (திருப்புங்கூர் தலத்தில் நந்தனாருக்காக நந்தி விலகியதும் குறிப்பிடத்தக்கது)

சிறப்புக்கள்

  • சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று.
  • "பூந்துருத்தி காடவநம்பி "யின் அவதாரத் தலம்.
  • இத்தலத்திலும் நந்தி விலகியுள்ளது. (தலபுராணம் தொடர்புடையது.)
  • ஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான் தன் தோளிற் சுமந்தத் தலம். இவ்விடம் சம்பந்தர் மேடு என்று சொல்லப்படுகிறது. (திருவாம்பொழிலுக்குப் பக்கத்தில் வெள்ளாம்பரப்பூரையடுத்து இம் மேடு உள்ளது. இங்கு இருவருக்கும் கோயில் உள்ளது; விழா நடைபெறுகிறது.)
  • அப்பர் அமைத்த - "திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்" என்று புகழப்படும் திருமடம் உள்ள தலம். இங்கு இருந்து தான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல பதிகங்களையும் பாடியருளினார்.
  • கருவறையின் தென்பால் தென்கயிலையும், வடபால் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன.
  • மகிடனையழித்த பாவத்தைப் போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமானும், பூந்துருத்தி காடவ நம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன.
திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய மூன்று பதிகங்களில் நில்லாத நீர்சடைமேல் என்று தொடங்கும் பதிகத்தில் இருந்து ஒரு பாடல்...திருசிற்றம்பலம்...

திருப்பூந்துருத்தி அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருவாலம்பொழில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.47 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.66 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கண்டியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.18 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவையாறு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.53 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பெரும்புலியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.66 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவேதிகுடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.15 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பழனம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.31 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசோற்றுத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.56 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கானூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.83 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • மேலைதிருக்காட்டுப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.13 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.