HolyIndia.Org

திருப்பராய்த்துறை , பராய்த்துறைநாதர், தாருகாவன நாதர் ஆலயம்

பராய்த்துறைநாதர், தாருகாவன நாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருப்பராய்த்துறை
இறைவன் பெயர் : பராய்த்துறைநாதர், தாருகாவன நாதர்
இறைவி பெயர் : பசும்பொன்நாயகி, ஹேமவர்ணாம்பிகை
தல மரம் : பராய் மரம்
தீர்த்தம் : காவிரி
வழிபட்டோர்: இந்திரன், குபேரன், சப்தரிஷிகள்
எப்படிப் போவது : இத்தலம் திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலை வழியில் சுமார் 16 கி.மி. தொலைவில் உள்ளது. திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் திருப்பராய்த்துறை செல்ல இருக்கின்றன. கோவிலின் வாயிலில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருப்பராய்த்துறை
ஆலயம் பற்றி :

காவிரியின் தென்கரையில் உள்ள 127 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் ஆலயம் மிகவும் தொண்மையான ஒரு கோவிலாகும். இவ்விடத்தில் காவிரி மிகவும் அகலமாக ஓடுவதால் அகண்ட காவிரி என்று அழைக்கப்படுகிறது. பராய் மரங்கள் நிறைந்த தலமாக இவ்வூர் திகழ்வதால் பராய்த்துறை என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தின் தலவிருட்சம் பராய் மரமே ஆகும்.

தல புராண வரலாறு: இத்தலத்தில் தவம் செய்து வந்த தாருகவன முனிவர்கள் தான் என்ற அகந்தையால் மமதை கொண்டனர். தாங்கள் செய்யும் வேள்விகளே முதன்மையானது என்றும் அதனால் இறைவனை துதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கருதி நடந்து கொண்டனர். அவர்களின் மமதையை அடக்க இறைவன் சிவபெருமான் பிச்சாடணர் வேடம் பூண்டு தாருகாவனத்திற்கு வந்து முனிபத்தினிகளை மயக்கினார். முனிவர்கள் இறைவனை அழிக்க மாபெரும் யாகம் செய்தனர். யாக குண்டத்திலிருந்து தோன்றிய புலிகளை இறைவன் மீது ஏவினர். சிவபெருமான் அவற்றைக் கொன்று தோலை ஆடையாக அணிந்து கொண்டார். முனிவர்கள் பிறகு மானை ஏவினர். இறைவன் அவற்றை அடக்கி தனது இடக்கரத்தில் ஏந்திக் கொண்டார். முனிவர்கள் பாம்புகளை ஏவ சிவபெருமான் அவற்றைத் தனது அணிகலன்களாக்கி கொண்டார். பூதகணங்களை முனிவர்கள் ஏவினர். எதனாலும் இறைவனை வெல்ல முடியவில்லை என்று தெரிந்து கொண்ட முனிவர்கள் ஞானம் பெற்று வந்திருப்பது பரம்பொருள் சிவபெருமானே என்பதைப் புரிந்து கொண்டு மமதை அடங்கி இறைவனிடம் தஞ்சம் அடைந்தனர். இறைவன் அவர்களை மன்னித்து அவர்களுக்கு தாருகாவனேஸ்வரராக காட்சி அளித்தார்.

கோவிலின் சிறப்பு: இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு லிங்கமாகும்.இறைவன் தாருகாவனேஸ்வரர் என்ரும், பராய்த்துறை நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி நாமம் பசும்பொன் மயிலாம்பிகை, ஹேம வர்ணாம்பிகை என்பதாகும்.

தல வரலாறு பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் "பராய்த்துறை" எனப்படுகிறது. இத்தலத்திற்கு "தாருகாவனம்" என்றும் பெயருண்டு. (பராய் மரம், சமஸ்கிருதத்தில் "தாருகா விருக்ஷம்" எனப்படுகிறது.) இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்தார். சிறப்புக்கள் இங்குள்ள நவகிரகங்களுள் சனிபகவானுக்கு மட்டுமே வாகனம் உள்ளது; ஏனையோருக்கு வாகனமில்லை. முதற் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது இத்திருக்கோயில். கல்வெட்டில் இத்தலம், "உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை" என்றும்; இறைவன் பெயர் "பராய்த்துறை மகாதேவர் " என்றும்; "பராய்த்துறைப் பரமேஸ்வரன்" என்றும் குறிக்கப்படுகிறது.

...திருசிற்றம்பலம்...

திருப்பராய்த்துறை அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருப்பைஞ்ஞீலி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.75 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பாச்சிலாச்சிராமம் ( திருவாசி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.75 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • கற்குடி (உய்யக் கொண்டான் மலை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.60 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமூக்கிச்சரம் (உறையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 13.24 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருச்சிராப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.43 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவானைக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.55 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகடம்பந்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.59 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவாட்போக்கி (ரத்னகிரி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.09 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஈங்கோய்மலை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.59 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருபாற்றுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 22.50 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.