HolyIndia.Org

திருஈங்கோய்மலை , மரகதாசலேஸ்வரர் ஆலயம்

மரகதாசலேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருஈங்கோய்மலை
இறைவன் பெயர் : மரகதாசலேஸ்வரர்
இறைவி பெயர் : மரகதவல்லி
தல மரம் : அம்பிகை, அகத்தியர் (ஈ வடிவில்) முதலியோர்
எப்படிப் போவது : திருச்சிக்கு அருகில் உள்ள குளித்தலையில் இருந்து காவிரி ஆற்றைக் கடந்து சென்றால் இத்தலம் அமைந்துள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருஈங்கோய்மலை
ஆலயம் பற்றி :
Temple: இத்தலத்து இறைவனும் ஒரு சிறிய குன்றின் மீது அமர்ந்திருக்கிறார். திருவாட்போக்கி மலையைப் போன்று அவ்வளவு உயரமில்லை. சுமார் 500 படிகள் ஏறினால் கோவில் வந்தடையலாம் அகத்தியர் ஈ உருவத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர் வந்தது. காலையில் கடம்பந்துறை கடம்பவன நாதரையும், பகலில் திருவாட்போக்கியில் உள்ள வாட்போக்கி நாதரையும், மாலையில் இங்குள்ள மரகதாசலேஸ்வரரையும் வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது.

தல வரலாறு

  • தற்போது மக்கள் வழக்கில் திருவிங்கநாதலை என்று வழங்குகிறது.

  • அகத்தியர் ஈ வடிவில் சென்று சுவாமியைத் தரிசித்த தலம்.

சிறப்புக்கள்

  • அம்பிகை வழிபட்டதால் இதற்கு சிவசக்திமலை என்றும் பெயர் வழங்குகிறது.

  • சிவலிங்கம், பெயருக்கேற்ப மரகதக்கல் போல நல்ல பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கிறது.
  • நக்கீரர் இம்மலை மீதுள்ள பெருமான் மீது "ஈங்கோய் எழுபது " என்ற நூலைப் பாடிப் பரவியுள்ளார்.
  • சிவராத்திரியன்று அல்லது முன்நாளில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படுகின்றது.
  • ஈங்கோய்மலைக் கோயில் அருகில் உள்ள வாட்போக்கிமலை, கடம்பந்துறையை பார்க்கிறது; கடம்பந்துறைக் கோயில் ஈங்கோயைப் பார்த்த வண்ணமுள்ளது. இம்மூன்று மலைகளும் சோமாஸ்கந்த வடிவில் உள்ளதென்பர். ஒரேநாளில் காலையில் கடம்பர் கோயிலையும் (கடம்பத்துறை) நண்பகலில் வாட்போக்கியையும், மாலையில் திருஈங்கோய் மலையையும் தரிசித்தல் விசேஷமானது என்பர். "காலைக் கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் " என்னும் வழக்குள்ளது. இவ்வாறு தரிசிப்பது எல்லா நாட்களும் ஏற்றவையெனினும் கார்த்திகைச் சோமவாரம் சிறப்பான நாளாகச் சொல்லப்படுகிறது.
...திருசிற்றம்பலம்...

திருஈங்கோய்மலை அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருகடம்பந்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.95 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவாட்போக்கி (ரத்னகிரி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.09 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பராய்த்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.59 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பாச்சிலாச்சிராமம் ( திருவாசி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.09 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பைஞ்ஞீலி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.09 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • கற்குடி (உய்யக் கொண்டான் மலை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.14 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமூக்கிச்சரம் (உறையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.82 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • கருவூர் (கரூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 35.52 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவானைக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 35.73 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருச்சிராப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 35.96 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.