Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருபாற்றுறை |
இறைவன் பெயர் : | திருமூலநாதர் |
இறைவி பெயர் : | மோகநாயகி, மேகலாம்பிகை |
தல மரம் : | வில்வம் |
தீர்த்தம் : | கொள்ளிடம் |
வழிபட்டோர்: | மார்க்கண்டேயர், சூரியன் |
எப்படிப் போவது : | திருச்சி - திருவானைக்கா - கல்லணை வழித்தடத்தில் பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி 3 Km சென்றால் இத்தலத்தை அடையலாம். |
சிவஸ்தலம் பெயர் : | திருபாற்றுறை |
ஆலயம் பற்றி : திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது தல வரலாறு மக்கள் வழக்கில் திருப்பாலத்துறை என்று வழங்குகிறது. இங்குள்ள அம்பிகையை நெஞ்சுருகி வழிபட்டால் மகப்பேறு கிட்டும் என்று நம்பப்படுகிறது. சிறப்புக்கள் மூலவர் சுயம்பு திருமேனி - சிறிய மூர்த்தி. அர்த்த மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் நான்கு தூண்கள் விளங்கி, "தேவசபை" என்றழைக்கப்படுகிறது. கல்வெட்டில் இத்தலம் "கொள்ளிடம் தென்கரை நாட்டுப் பிரமதேயமான உத்தமசீவி சதுர்வேதி மங்கலத் திருப்பாற்றுறை" என்றும் இறைவன் "திருப்பாற்றுறை மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது. முதற்பராந்தகன், விக்கிரமசோழன் காலத்திய இக்கல்வெட்டுக்களில் ஒன்றின் மூலம் கோயிலருகில் திருநாவுக்கரசர் திருமடம் இருந்ததாக அறிகிறோம். அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவானைக்காவிலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ளது. "திருச்சிமெயின்கார்டு கேட்"டிலிருந்து திருவானைக்கா வழியாக கல்லணை செல்லும் நகரப் பேருந்தில் சென்று பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி, கொள்ளிடம் நோக்கி வரவேண்டும். ...திருசிற்றம்பலம்... |