Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருப்பழவூர் |
இறைவன் பெயர் : | வடமூலநாதர், வடமூலேஸ்வரர் |
இறைவி பெயர் : | அருந்தவநாயகி |
தல மரம் : | ஆல மரம் |
தீர்த்தம் : | பிரம தீர்த்தம் |
வழிபட்டோர்: | அம்பிகை, பரசுராமர் |
எப்படிப் போவது : | திருச்சி - அரியலூர் சாலை வழித்தடத்தில் அல்லது திருவையாறு - அரியலூர் சாலை வழித்தடத்தில் கீழப்பழவூர் என்ற சிறிய ஊரில் பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. அரியலூரில் இருந்து சுமார் 12 Km தொலைவில் உள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருப்பழவூர் |
ஆலயம் பற்றி : திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது தல வரலாறு ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டமையால்,இப் பெயர்(பழு-ஆலமரம்) . அம்பிகை தவம் செய்ததால்,யோகவனம் என்றும் பெயர். பரசுராமர்,தன் தாயைக் கொன்ற பழி தீரும் பொருட்டு,பூஜித்த தலம். சிறப்புக்கள் இவ் வூர்,மேலப் பழுவூர், கீழப்பழுவூர் என இரு பகுதிகளைக் கொண்டது.இது,கீழப் பழுவூராகும்.மேலப் பழுவூர்,மறவனீச்சரம் என்னும் கோவிலைக் கொண்டது.. சோழர் காலக் கல்வெட்டுகள் 23 படி எடுக்கப்பட்டுள்ளன. ...திருசிற்றம்பலம்... |