ஆலயம் பற்றி : தல வரலாறு
அர்ச்சுனன் - விசயன் வழிபட்ட தலமாதலின், "விசயமங்கை" எனப்படுகிறது.
சிறப்புக்கள்
மூலவர் சிவலிங்கத் திருமேனி - அருச்சுனன் அம்பு பட்ட தழும்பு - கோடு - சிவலிங்கத் திருமேனியில் கீற்று போல் உள்ளது.
தற்போதைய நிலை (தேவை)
மிகவும் பழமையான கோயில், பழுதடைந்த நிலையில் உள்ளது. கோயிலின் செங்கல் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. பராமரிப்பார் இலர். சுவாமி, அம்பாள் விமானங்களில் கலங்களும் சுதையாலேயே அமைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை பூசைமட்டுமே நடைபெறுகிறது. அதுவும் சிவாசாரியரின் சொந்த முயற்சியால் நடைபெறுகிறது.
...திருசிற்றம்பலம்... |