ஆலயம் பற்றி : தல வரலாறு
பிரளய காலத்தில், வெள்ளம் ஊரினுள் புகாதவாறு தடைப்பட்டு, புறத்தே நின்றமையால், இப்பெயர் பெற்றது. இத்தல விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் எனப்படுகிறார்.
ஒரு வணிகப் பெண்ணிற்காக, இவ்வூர் இறைவன் மதுரை சென்று, சாட்சி கூறினமையால், சாட்சி நாதர் எனப் பெற்றார். வன்னி மரம், கிணறு, மடைப்பள்ளி (மதுரையிலுள்ளது.)
சனகர் முதலிய நால்வருக்கு இறைவன், இத்தலத்தில் அறத்தை உணர்த்தினார்.
சிறப்புக்கள்
இத்தல விநாயகர் (பிரளயங்காத்த விநாயகர்) சிப்பி, சங்குகளால் ஆக்கப்பெற்றவர். ஆண்டுதோறும், ஆவணி மாதத்துச் சதுர்த்தியில் ஒரு ஆடம் தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. அவ்வளவு தேனும் அவர் திருமேனியில் சுவறி விடுகிறது.
இக் கோவில் பணிமகள் ஒருவரைக் கொன்று, அவ்வம்மையாருடைய அணிகலன்களை திருடிய ஒடம் விடுபவன், தானும் ஆற்றைக் கடப்பதற்குள், ஆற்றில் தவறி விழுந்து இறந்தான். இச்செய்தியைச் சுந்தரர், தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
இக் கோவில் மதுரை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது.
சோழர் கால கல்வெட்டுகள் 11 படி எடுக்கப்பட்டுள்ளன.
...திருசிற்றம்பலம்... |