HolyIndia.Org

திருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் ) , கற்கடேஸ்வரர், தேவதேவேசர் ஆலயம்

கற்கடேஸ்வரர், தேவதேவேசர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் )
இறைவன் பெயர் : கற்கடேஸ்வரர், தேவதேவேசர்
இறைவி பெயர் : அருமருந்துநாயகி, அரவிந்தநாயகி
எப்படிப் போவது : கும்பகோணத்திற்கும் சூரியனார் கோவிலுக்கும் இடையில் உள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 Km தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் )
ஆலயம் பற்றி :

தற்போது நண்டாங் கோவில் என்று அறியப்படும் இத்தலம் தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். தல புராணப்படி உமாதேவி ஒரு சமயம் கைலாயத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து நண்டு உருவத்தில் இறைவனை வழிபட்டாள். கோவிலைச் சுற்றி உள்ள அகழியில் இருந்த நீரில் பூத்துக் குலுங்கிய தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். தேவேந்திரனும் அதே சமயம் இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தான். அகழியில் தன்னால் பயிரடப்பட்ட தாமரை மலர்களை நண்டு கொண்டு வந்து இறைவனுக்கு சாத்தி வழிபடுகிறதே என்று கோபம் கொண்டான். நண்டு உருவத்தில் இறைவனை வழிபடுவது பார்வதி தேவியே என்று அறியாத இந்திரன் லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது. நண்டு உருவில் இருந்த உமாதேவியைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான் லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி நண்டு உருவில் இருந்த சக்தியை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். எனவே இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகிறது. நண்டு சிவனை வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.

கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் துவாரத்தில் 21 குடம் காராம்பசு பாலை அபிஷேகித்தால் நண்டு வெளிப்படும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது. டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் ஒரு நிறப்பசுவின் பால் பத்து கலம் அபிஷேகம் செய்தால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் தரிசனம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.

முதலில் செங்கல்லால் கட்டபட்டு பிறகு கற்கோவிலாக திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில் தற்போது நன்கு பராமரிக்கப் படாமல் காட்சி அளிக்கிறது. இத்தலத்தில் இறைவிக்கு இரண்டு சந்நிதிகள் இருக்கின்றன. ஒரு சந்நிதியில் அருமருந்துநாயகியும், மற்றொரு சந்நிதியில் அரவிந்தநாயகியும் வீற்றிருந்து அருள் பாவிக்கிறார்கள். அம்பாள் அருமருந்து நாயகிக்கு அபிஷேகம் செய்து தரப்படும் தீர்த்தத்தை உட்கொண்டால் வியாதிகள் தீர்கின்றன என்று நம்பப்படுகிறது. கோவிலில் இந்த அபிஷேக தீர்த்தம் விலைக்கு விற்கப்படுகிறது.

சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்கு தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலயில் இருக்கிறார். எல்லா வகையான் யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர்.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம்

மருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே. 
தல வரலாறு நண்டு பூசித்த தலமாதலின் "நண்டாங் கோயில் " என்று வழங்குகிறது. (திருந்துதேவன்குடி என்னும் பெயருடைய ஊர் தற்போது இல்லை. கோயில் மட்டுமே உள்ளது. கோயில் இருந்த இடம் நன்செய் நிலங்களாயின. கோயிலைச் சுற்றி அகழியுள்ளது. இப்பகுதி திருந்துதேவன்குடி என்று சொல்லப்படுகிறது, மிகப் பெரிய சிவாலயம், பழுதடைந்துள்ளது. சுவாமி அம்பாள் கருவறைகளும் முன் மண்டபங்களும் மட்டுமே உள்ளன.) வழிபட்டு நோய் நீங்கப்பெற்ற மன்னன் செய்த பிரதிஷ்டை "அருமருந்தம்மை" யாகும். பின்னர் பழமையாக இருந்த அம்பாளும் கண்டெடுக்கப்பட்டு அதுவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவே "அபூர்வநாயகி " திருமேனியாகும். சிறப்புக்கள் "தேனும் வண்டும் இசைபாடும் தேவன்குடி" என்னும் தேவாரத்தொடருக்கேற்ப கோயிலில் தேனீக்களின் ரீங்கார ஒலி கேட்கிறது. (கோயிலில் பாதுகாப்பில்லாததால் திருமேனிகள் வேறிடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.) ...திருசிற்றம்பலம்...

திருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் ) அருகில் உள்ள சிவாலயங்கள்

 • திருவியலூர் (திருவிசைநல்லூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.03 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருவிடைமருதூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.15 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருமங்கலக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.68 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருநாகேஸ்வரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.93 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருசேய்ஞலூர் (செங்கானூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.19 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருஆப்பாடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.55 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
 • சிவபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.64 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருகுடந்தை கீழ்கோட்டம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.04 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருக்குடந்தைக் காரோணம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.17 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
 • திருக்குடமூக்கு (கும்பகோணம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.49 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.