HolyIndia.Org

திருமங்கலக்குடி , பிராண நாதேஸ்வரர் ஆலயம்

பிராண நாதேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருமங்கலக்குடி
இறைவன் பெயர் : பிராண நாதேஸ்வரர்
இறைவி பெயர் : மங்களநாயகி, மங்களாம்பிகை
தல மரம் : வெள்ளெருக்கு
தீர்த்தம் : காவிரி
வழிபட்டோர்: காளி, சூரியன், திருமால், பிரமன், அகத்தியர் ஆகியோர்
எப்படிப் போவது : கும்பகோணத்தில் இருந்து சாலை வழியாக 15 Km தொலைவில் திருமங்கலக்குடி சிவஸ்தலம் இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை 3 Km தொலைவு. ஆடுதுறை ரயில் நிலையம் மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருமங்கலக்குடி
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • முதலாம் குலோத்துங்கன் காலத்தில் மந்திரியொருவன் மன்னனின் வரிப்பணத்தைக் கொண்டு திருமங்கலக்குடியில் அருள்மிகு பிராணவரதேஸ்வரருக்கு கோயில் கட்டினான். அதையறிந்த மன்னன் சினமுற்று மந்திரியைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான். மந்திரியின் மனைவி அத்தலத்து மங்களாம்பிகையிடம் தனக்கு மாங்கல்யக் காப்பு தருமாறு நெஞ்சுருகி வேண்டினாள். மந்திரி அரசனிடம் தன் உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு வேண்டினான். மன்னன் உத்தரவு நிறைவேற்றப்பட்டு, மந்திரியின் உயிரற்ற உடலை எடுத்து வரும்போது திருமங்கலக்குடியை அடைந்ததும், மங்களாம்பிகை அருளாள் அவன் உயிர் பெற்றான். மங்களாம்பிகை மாங்கல்யக் காப்பு தந்தருளி ஆட்கொண்டாள். அது முதல் தன்னை வழிபடுவோர்க்கும் மாங்கல்ய பலம் அருளுவதாக அம்பிகை அருளினாள் என்பது வரலாறு.

சிறப்புக்கள்

    இத்தலம் மங்கள விமானம், மங்களவிநாயகர், மங்களாம்பிகை, மங்களதீர்த்தம், மங்கலக்குடி என்னும் ஐந்து மங்களங்கள் இணைந்துள்ள தொடர்பால் பஞ்ச மங்கள «க்ஷத்திரம் என்று புகழப்படும் சிறப்புடையது.
  • தல வரலாறு தொடர்பால் - திருமணத்தடை ஏற்படுகின்றவர்கள் இங்கு வந்து அம்பாளை அருச்சித்து வழிபடுகிறார்கள். மேலும், இவ்வரலாற்றையொட்டி "பிராணன் தந்த பிராணவரதேஸ்வரர், மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை" என்னும் மொழி மக்கள் வழக்கில் இருந்து வருகிறது.
  • நவக்கிரகங்களின் தோஷம் நீங்கிய தலம் சூரியனார் கோயில்; அத்தோஷத்தை நீக்கியருளிய பெருமான் திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள பிராணவரதேஸ்வரரேயாவார். ஆகவே திருமங்கலக்குடியை வழிபட்ட பின்னரே சூரியனார் கோயில் சென்று வழிபட வேண்டும் என்பது மரபாக இருந்து வருகிறது.
  • உள்சுற்றில் பதினோரு சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாகவுள்ளன.
  • மூலவர் - சிவலிங்கத் திருமேனி; நீண்டுயர்ந்த பாணம்.
  • உடலில் வியாதியுள்ளவர்கள் இங்கு வந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் சுவாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட்டு வந்தால் வியாதியிலிருந்து நீங்கப்பெருவர் என்பது வரலாறு. இன்றும் அவ்வாறு பலர் குணமடைந்து வருகிறார்கள்.
  • இக்கோயிலில் சோழர், பல்லவர், விஜய நகர மன்னர்கள் காலத்திய 6 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - கதிராமங்கலம் - மயிலாடுதுறை பேருந்துச் சாலையில் திருமங்கலக்குடி உள்ளது. ஆடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்துகளில் சென்று இவ்வூரை அடையலாம்.
...திருசிற்றம்பலம்...

திருமங்கலக்குடி அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருவிடைமருதூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.71 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • தென்குரங்காடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.78 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகஞ்சனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.41 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவாவடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.49 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநீலக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.61 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.68 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவியலூர் (திருவிசைநல்லூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.97 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசேய்ஞலூர் (செங்கானூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.58 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கோழம்பம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.91 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகோடிக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.52 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.