ஆலயம் பற்றி :
தல வரலாறு
சிறப்புக்கள்
- மூலவர் சுயம்பு மூர்த்தி - சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்துடன் காட்சித் தருகிறார்.
- இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சிறப்புடையது; குருமூர்த்தத் தலம். உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி கோயிலுக்குள்ளேயே மூலமூர்த்தியாக உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில்
காட்சித் தருகிறார்.
- சந்நிதியின் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும்; மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
- சோழர் காலக் கல்வெட்டு ஒன்றும், பல்லவர்கள் காலத்தவை ஐந்தும் ஆக ஆறு கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.
- மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் "வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேத
மங்கலம் " என்றும்; இறைவன் பெயர் "வடதளி உடையார் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
...திருசிற்றம்பலம்... |