சிவஸ்தலம் பெயர் : | திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) |
இறைவன் பெயர் : | கண்ணாயிரநாதர் |
இறைவி பெயர் : | கோதைநாயகி, சுகந்த குந்தளாம்பிகை |
தல மரம் : | சரக்கொன்றை |
தீர்த்தம் : | இந்திர தீர்த்தம் |
வழிபட்டோர்: | வள்ளளார்,இந்திரன் |
எப்படிப் போவது : | சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன்கோவில் என்ற பாடல் பெற்ற தலத்தில் இருந்து சுமார் 7 Km தொலைவில் திருக்கண்ணார்கோவில் சிவஸ்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவில் - மாயவரம் சாலையில் பாகசாலை என்ற ஊர் வரும். அங்கிருந்து பிரியும் சாலையில் 3 கி.மி. தொலைவில் திருக்க |
சிவஸ்தலம் பெயர் : | திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) |
ஆலயம் பற்றி : திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது
தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப்
பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம்
நண்ணாவாகும் நல்வினையாய நணுகும்மே.
தல வரலாறு
இத்தலம் மக்கள் வழக்கில் குறுமாணக்குடி என்று வழங்குகிறது.
இந்திரனின் சாபம் இங்கு நீங்கியதாக ஐதீகம்.
சிறப்புக்கள்
மூலவர் - சுயம்பு திருமேனி; சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன.
திருமணமாகாதோர் இங்கு வந்து சுவாமிக்கு மாலை சார்த்தி வழிபடுதலும், அவ்வாறு வழிபட்டோர் திருமணத்திற்கு பிறகும் இங்கு வந்து மாலை சார்த்துதலும் மரபாக உள்ளது....திருசிற்றம்பலம்... |