HolyIndia.Org

திருபல்லவனீச்சுரம் , பல்லவனேஸ்வரர் ஆலயம்

பல்லவனேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருபல்லவனீச்சுரம்
இறைவன் பெயர் : பல்லவனேஸ்வரர்
இறைவி பெயர் : சௌந்தரநாயகி
தல மரம் : மல்லிகை, புன்னை (தற்போதில்லை)
தீர்த்தம் : காவிரி,ஜான்னவி தீர்த்தம்
வழிபட்டோர்: அகத்தியர், பல்லவ மன்னன்
எப்படிப் போவது : சீர்காழிக்கு அருகில் உள்ள பூம்புகாரில் (காவிரிப்பூம்பட்டிணம்) இந்த சிவஸ்தலம் உள்ளது. சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காவிரிப்பூம்பட்டிணம் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன.
சிவஸ்தலம் பெயர் : திருபல்லவனீச்சுரம்
ஆலயம் பற்றி :
தல வரலாறு இன்று காவிரிப்பூம்பட்டினம் - பூம்புகார் என்று வழங்கப்படுகிறது. கோயிலுக்கு எதிரில் அகத்தியர் உண்டாக்கிய ஜான்னவி தீர்த்தம் - திருக்குளம் உள்ளது. சிறப்புக்கள் பட்டினத்தார், இயற்பகை நாயனார் ஆகியோரின் அவதாரப் பதி. சிலப்பதிகாரக் காப்பியம் தொடங்குவது இத்தலத்தில்தான். வெளிமண்டபத்தில் தலப்பதிக கல்வெட்டு உள்ளது. மாறவர்மன்திருபுவனச் சக்ரவர்த்தி சுந்தரபாண்டியனது 17-ஆம் ஆட்சியாண்டில் இராஜாதி ராஜ வளநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்துக் கோயிலுக்கு நிலம் வழங்கியதையும் மற்றும் சாலி வாகனசகம். கலி 4775 சகம் 1670 (கி. பி. 1757) ஜய வருடம் ராயரவுத்த மிண்ட நாயனார் முதலியோர் திருச்சாய்க்காட்டுச்சீனம், காவிரிப்பூம்பட்டினம் மாகாணம் பல்லவனீச்சரக் கோயிலுக்குத் திருப்பணிக்கும் வழிபாட்டிற்கும் நிலம் வழங்கிய செய்தியை இங்குள்ள இரு வெவ்வேறு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உள் மண்டபத்தில் தில்லையமைப்பில் அமைந்துள்ள சபாபதி சபை தரிசிக்கத்தக்கது. ஆடி மாதத்தில் பட்டினத்தாருக்கு பன்னிரு நாள்கள் திருவிழா எடுக்கிறார்கள். ...திருசிற்றம்பலம்...

திருபல்லவனீச்சுரம் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருசாய்க்காடு (சாயாவனம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 0.62 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவலம்புரம் ( மேலப்பெரும்பள்ளம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.40 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவெண்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.85 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருதலைச்சங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.41 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • கீழை திருக்காட்டுப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.64 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஆக்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.81 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கலிகாமூர்(அன்னப்பன் பேட்டை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.26 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடையூர் மயானம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.75 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநனிபள்ளி (புஞ்ஜை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.17 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.38 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.