ஆலயம் பற்றி : திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதற்கு மனமில்லாமல் திருவேட்களம் என்ற இத்தலத்திலிருந்து கொண்டு தான் சிதம்பரத்திற்கு எழுந்தருளி நடராஜப் பெருமானை தரிசித்து வந்தார். அர்ஜுனன் இத்தலத்தில் தான் இறைவன் பாசுபதநாதரிடம் இருந்து பாசுபதாஸ்திரம் பெற்றான். பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அர்ஜுனன் உற்சவ விக்கிரகமும் இவ்வாலயத்தில் உள்ளன. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த உற்சவம் நடைபெறுகிறது. நாரதர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்....திருசிற்றம்பலம்... |