HolyIndia.Org
Holy India Org Add New Temple

ராஜபதி


இறைவன்கைலாசநாதர்
இறைவிசவுந்தர நாயகி
கிராமம்/நகரம்ராஜபதி
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு :

அகத்திய முனிவரின் சீடரான உரோமச  முனிவர் முக்தியைக் வேண்ட, ஸ்ரீ அகத்திய மாமுனிவரின் கூற்றுப்படி, ஜீவ நதியான தாமிர பரணியில், ஒன்பது தாமரை மலர்களை விட்டு, அவை கரை ஒதுங்கும் இடத்தில், ஸ்ரீ கைலாசநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, முக்தி பெற்றார் அவ்வாறு ஏற்பட்ட நவ கயிலாய ஸ்தலங்களான

1. பாபநாசம்  2. சேரன்மாதேவி   3. கோடகநல்லூர்  4. குன்னத்தூர்  5. முறப்பாடு  6. ஸ்ரீ வைகுண்டம்  7. தென் திருப்பேரை  8. இராஜபதி  9. சேர்ந்த பூமங்கலம்   

என்ற வரிசையில் இது கேது ஸ்தலம். இக்கோயில் இருக்கும் இடத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு லிங்கம் மட்டுமே இருக்கிறது. அம்பாள், பரிவார தெய்வங்கள் யாரும் இல்லை. இங்குள்ள லிங்கத்தின் நான்கு புறங்களிலும் 4 சக்கர வடிவங்கள் இருக்கிறது. லிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக சொல்கிறார்கள். இத்தலம் பற்றி தெரிந்த பக்தர்கள் மட்டும் இங்கு வருகின்றனர். பக்தர்கள் இந்த லிங்கத்தை வழிபட்டு, அருகிலுள்ள மண்ணை பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர். பக்தர்களும், அறநிலையத்துறையினரும் மனது வைத்தால் இத்தலத்தில் புதிய கோயில் எழுப்பி, நவகைலாய தலங்களை முழுமை செய்த புண்ணியத்தைப் பெறலாம்.


திருவிழா : திருவாதிரை, சிவராத்திரி, பிரதோஷம், மாதபிறப்பு
சிறப்பு : இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாகும்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இக்கோயிலில் 30.05.2010, வைகாசி 16  ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்  அருள்மிகு  ஸ்ரீ சௌந்தர நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ஜாதகத்தில் கேது திசை நடப்பவர்களும், கேதுவின் ஆதிக்கத்தில், உள்ளவர்களும், கேது ஸ்தலமான, ஸ்ரீ காளகஸ்திக்கு நிகரான இராஜபதியில் வழிபடுவது சிறப்பு.


பிரார்த்தனை : ஜாதகரீதியாக கேது தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஞானகாரகனான கேதுவின் அம்சமாக இத்தலத்தில் சிவன் அருளுவதால் இவரிடம் வேண்டிக்கொள்ள அறிவான குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை.


நேர்த்திக்கடன் : இந்த சிவனுக்கு பலவர்ண வஸ்திரம் சாத்தி, கொள்ளு நைவேத்யம் படைத்து வழிபடலாம். புதிய கோயில் கட்டுவதற்கு நிதியுதவி செய்யலாம்.
தல சிறப்பு : நவ கைலாயத்தில் இது கேது வணங்கிய ஸ்தலம். இக்கோயில் இருக்கும் இடத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு லிங்கம் மட்டுமே இருக்கிறது.இங்குள்ளலிங்கத்தின் நான்கு புறங்களிலும் 4 சக்கர வடிவங்கள் இருக்கிறது. லிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக சொல்கிறார்கள்.


பாடியவர்கள் : -
முகவரி : ஜோதி குருக்கள் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி -628 207 தூத்துக்குடி மாவட்டம்