HolyIndia.Org
Holy India Org Add New Temple

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி


இறைவன்வனபத்ரகாளியம்மன்
தல மரம்தொரத்திமரம்
தீர்த்தம்பவானி தீர்த்தம்
கிராமம்/நகரம்தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : ஆடிக்குண்டம் ஜூலை 15 நாள் திருவிழா அன்னையிடம் முறைப்படி அனுமதி பெற்று ஆடி முதல் செவ்வாய் பூச்சாட்டி 2 ஆம் செவ்வாய் திருபூக்குண்டம் அமைத்து 3 ம் செவ்வாய் மறுபூஜை செய்து விழா கொண்டாடப்படும். 36 ஆடி நீளமுள்ள திருக்குண்டம் அமைக்கப்பட்டு விழா சிறப்புடையதாய் கொண்டாடப்படும். இத்திருவிழாவின் போது 2 லட்சம் பக்தர்கள் பங்குபெறுவது கண்கொள்ளாக்காட்சி. இவை தவிர வாரத்தின் செவ்வாய் வெள்ளி கிழமைகளில் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் இக்கோயிலில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
சிறப்பு : இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 இரவு மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : குண்டமிறங்கல் எனும் தீமிதிக்கும் நேர்த்திக்கடன் இத்தலத்தில் சிறப்பாகும்.
பிரார்த்தனை : செய்வினை, பில்லிசூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக்கோயிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குகிறது என்பது இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் அனுபவத்தில் கண்ட உண்மை என்று மெய்சிலிர்த்து கூறுகின்றனர்.

இது தவிர அம்மனிடம் குழந்தை வரம் வேண்டி வணங்கி தொரத்தி மரத்தில் கல்லை கட்டிவிட்டு வழிபட்டால் தங்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது.


நேர்த்திக்கடன் : தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக இத்தலத்து பக்தர்கள் வழங்குவது வழக்கமாக உள்ளது. இது தவிர கிடா வெட்டுதல்தான் ( ஆடு வெட்டுதல்) இங்கு தனி சிறப்பாக உள்ளது. வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல் தான் நினைவிற்கு வரும். அம்மனுக்கு உகந்த ஆடு பலியிடுதல் ஞாயிறு செவ்வாய் புதன் ஆகிய நாட்களில் நடக்கும். ஒரு வõரத்திற்கு சுமார் 300 லிருந்து 400 கிடா வரை வெட்டப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிடாய் வெட்டுகின்றனர். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் - 641301. கோயம்புத்தூர் மாவட்டம்.