HolyIndia.Org
Holy India Org Add New Temple

மானூர்


இறைவன்பெரியாவுடையார் (பிரகதீஸ்வரர் )
தல மரம்கடம்பமரம்
தீர்த்தம்சண்முகநதி
கிராமம்/நகரம்மானூர்
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : ஆடி 18. இந்நாளில் பெரிய நாயகி அம்மன் இங்கு எழுந்தருளி சேர்ந்திருப்பதாக ஐதீகம். இந்த நாளில் பெண்கள் தாலிச்சரடு மாற்றுவார்கள். ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி, மாத பிரதோஷம், தமிழ்வருடப்பிறப்பு , ஆனி மாத ஜேஷ்டாபிஷேகம் , ஐப்பசி பவுர்ணமி அன்னபிஷேகம்,கார்த்திகை சம்வத்சராபிஷேகம், சங்காபிஷேகம், தனுர் மாத பூஜை, தை அமாவாசை ஆகியவை இங்கு முக்கிய திருவிழாக்கள்.
சிறப்பு : லிங்கத்தின் அம்பு பட்ட தழும்பு அபிஷேகத்தின் போது இப்போதும் காணலாம்.
திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இங்குள்ள இறைவனைச் சுற்றிலும் கோஷ்ட தேவதைகளாக பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் அமைந்திருப்பதும் கோயிலின் சிறப்பம்சமாகும்.மேலும் தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தியாக இங்கு வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.


பிரார்த்தனை : மேற்கு பார்த்த சிவாலயம். மிக சக்தி வாய்ந்தவர். அனுக்கிரக மூர்த்தி. எந்த வித பிரச்னையிலிருந்தும் காப்பாத்தக்கூடியவர். இது தவிர இத்தல இறைவனை வழிபட்டால் தடைபட்ட திருமணம்,குழந்தைப்பேறு, தகுதியான வேலை, பித்ரு சாபம் நீங்குதல்,எதிரிகள் தொல்லை நீங்குதல் தன்னம்பிக்கை, மன தெளிவு, கிடைக்கிறது.ஆயுள் ஆரோக்கியத்திற்காக ஆயுஸ்யஹோமம்,மிருத்தியஞ்சய ஹோமம் இங்கு செய்யப்படுகிறது.


நேர்த்திக்கடன் : இங்கு வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர்.
பாடியவர்கள் : -


முகவரி : அருள்மிகு பெரியாவுடையார் கோயில், மானூர்- 624 618 திண்டுக்கல் மாவட்டம்.