HolyIndia.Org
Holy India Org Add New Temple

மயிலாடுதுறை வான்முட்டி பெருமாள்

முன்னொரு காலத்தில் குடகுமலைச்சாரலில் நிர்மலன் என்ற அரசன் வாழ்ந்தான். அவன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்பட்டான். ஒருமுறை, அவன் காட்டு வழியாக வந்து கொண்டிருந்த போது, முனிவர் ஒருவர் வீணை மீட்டி மிகவும் இனிமையாக பாடிக்கொண்டிருந்தார். அவரிடம் மன்னன் தன் நோய் பற்றி வருந்தி முறை யிட்டான். இதனைக்கேட்ட முனிவர் மன்னனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசம் செய்து, அதை தினமும் ஜெபிக்கும்படி கூறினார்.முனிவர் கூறியபடி மன்னனும் அந்த மந்திரத்தை உருகி ஜெபிக்க தொடங்கினான். அப்போது அசரீரி ஒலித்தது.""நான் பெருமாளின் குரலாய் ஒலிக்கிறேன். உனக்கு ஒரு கடுமையான தோஷம் உள்ளது. இந்த தோஷம் நீங்க காவிரிக்கரை வழியாக உன் யாத்திரையை தொடங்கு. மூவலூரில் உள்ள மார்க்க சகாயேஸ்வரர் (சிவன்) உனக்கு வழிகாட்டியாக வருவார்.வழியில் உள்ள திருத்தலங்களில் எல்லாம் நீராடு. எங்கு உன்மேனி பொன் வண்ணமாக மாறுகிறதோ, அங்கேயே தங்கிவிடு,''என்றது.அதன்படி, மன்னன் காவிரிக்கரை வழியாக தன் பயணத்தை துவக்கினான்.ஓரிடத்தில் அவனது மேனி பொன்நிறமாக மாறியது. மகிழ்ச்சியடைந்த மன்னன் பெருமாளுக்கு நன்றி கூறி மனமுருகி வழிபட்டான். அந்த இடத்தில் ஒரு பெரிய அத்திமரம் தோன்றியது. அந்த மரத்தில் நாராயணன், சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஆகியவற்றுடன் மன்னனுக்கு காட்சி கொடுத்தார்.மன்னனின் பாவங்கள் இங்கு உடனடியாக நீங்கியதால் இத்தலம் "கோடிஹத்தி' என அழைக்கப்பட்டது. "கோடிஹத்தி' என்றால் "சகல பாவமும்நீங்குமிடம்' என்று பொருள். இதுவே, காலப்போக்கில் மருவி "கோழிகுத்தி' ஆனது. இதன் பின் மன்னன் பெருமாள் பக்தனாகி தவமிருந்து ரிஷியாகவே மாறி விட்டான். "பிப்பல மகரிஷி' என மன்னனை மக்கள் அழைத்தனர். பிப்பலர் காவிரிக்கரையில் தவம் புரிய ஆரம்பித்தார். அவர் தவம் செய்த இடத்தில் தற்போது ஒரு மண்டபம் உள்ளது. இதன் அருகில் ஓடும் காவிரி தீர்த்தத்தை "பிப்பல மகரிஷி தீர்த்தம்' என அழைக்கிறார்கள்.

மயிலாடுதுறை - மயிலாடுதுறை அருகில் உள்ள ஆலயங்கள் - மயிலாடுதுறை கோவில் அமைப்பு - மயிலாடுதுறை சண்டாளக் கன்னிகள் - மயிலாடுதுறை சிறப்புக்கள் - மயிலாடுதுறை தேவாரம் - மயிலாடுதுறை வதாரண்யேஸ்வரர் - மயிலாடுதுறை வரலாறு - மயிலாடுதுறை வான்முட்டி பெருமாள் - மயிலாடுதுறை வான்முட்டி பெருமாள் தலபெருமை -