HolyIndia.Org
Holy India Org Add New Temple

மயிலாடுதுறை வரலாறு

அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும்; மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று. அம்மை அவ்வாறு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும்; இதனால் இத்தலம் "கௌரி மாயூரம்" என்றும் பெயர் பெற்றது. சிறப்புக்கள் ஆயிரம் ஆனால் மாயூரம் ஆகுமா? (மாயூரம் - மயிலாடுதுறை) என்னும் முதுமொழி இதன் சிறப்பை விளக்கும். காசிக்குச் சமமான ஆறுதலங்களுள் இதுவுமொன்று. சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாம். கோயில் உட்சுற்றில் இந்திரன், அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. இத்தலத்துக் காவிரித் துறையில் (ஐப்பசி) துலா நீராடுதல் மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. நாடொறும் ஆறு கால வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. கந்தபுராணத்தில் வழிநடைப் படலத்தில் இத்தலம் பற்றிய குறிப்பு வந்துள்ளது சிறப்புடையது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் தலபுராணம், அபயாம்பிகை மாலையும், அபயாம்பிகை அந்தாதியும் பாடியுள்ளார். கல்வெட்டில் இத்தல இறைவன் "மயிலாடுதுறை உடையார் " என்று குறிக்கப் பெறுகின்றார்.

மயிலாடுதுறை - மயிலாடுதுறை அருகில் உள்ள ஆலயங்கள் - மயிலாடுதுறை கோவில் அமைப்பு - மயிலாடுதுறை சண்டாளக் கன்னிகள் - மயிலாடுதுறை சிறப்புக்கள் - மயிலாடுதுறை தேவாரம் - மயிலாடுதுறை வதாரண்யேஸ்வரர் - மயிலாடுதுறை வரலாறு - மயிலாடுதுறை வான்முட்டி பெருமாள் - மயிலாடுதுறை வான்முட்டி பெருமாள் தலபெருமை -