HolyIndia.Org
Holy India Org Add New Temple

மயிலாடுதுறை கோவில் அமைப்பு

நான்கு பக்கமும் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற 3 பக்கமும் மொட்டை கோபுரங்களுடனும் இவ்வாலயம் உள்ளது. வீதி உட்பட ஐந்து பிரகாரங்கள் உள்ளன. கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரத்திற்குத் தென்புறம் பெரியவிநாயகரும், வடபுறத்தில் ஆறுமுகனும் எழுந்தருளியுள்ளனர். வெளிப் பிரகாரத்தில் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக் உள்ள கோவிலில் ஆதி மாயூரநதர் எழுந்தருளியுள்ளார். வடபுறம் உள்ள அம்மன் சந்நிதியில் அன்னை அபயாம்பிகை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன், மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும், வலது திருக்கரத்தில் கிளியை ஏந்தி காட்சி தருகிறாள்.

மயிலாடுதுறை - மயிலாடுதுறை அருகில் உள்ள ஆலயங்கள் - மயிலாடுதுறை கோவில் அமைப்பு - மயிலாடுதுறை சண்டாளக் கன்னிகள் - மயிலாடுதுறை சிறப்புக்கள் - மயிலாடுதுறை தேவாரம் - மயிலாடுதுறை வதாரண்யேஸ்வரர் - மயிலாடுதுறை வரலாறு - மயிலாடுதுறை வான்முட்டி பெருமாள் - மயிலாடுதுறை வான்முட்டி பெருமாள் தலபெருமை -