HolyIndia.Org
Holy India Org Add New Temple

மன்னார்குடி

மன்னார்குடி_வரலாறு -
மன்னார்குடி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மன்னார்குடியில் உள்ள இராஜகோபாலசுவாமி திருக்கோயில் மிகவும் பெருமை வாய்ந்தது.

இவ்வூரின் அமைவிடம் 10.67° N 79.43° E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 6 மீட்டர் (19 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மன்னார்குடியில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில் உலகச் சிறப்பு வாய்ந்தது.இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், "ஹரித்ரா நதி' என்றே அழைக்கிறார்கள். குளமாக இருந்தாலும் நதியின் பெயரில் அழைக்கப்படும் தீர்த்தம் இது. ஆனி பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.

மன்னார்குடியில் ஒரு இரவு தங்கினால், ஆயிரம் ஆண்டுகளுக்கு தவம் செய்ததற்கு சமம் என இந்து புராணங்கள் கூறுகின்றன