HolyIndia.Org
Holy India Org Add New Temple

மதுரை மொட்டை விநாயகர்

இறைவன்விநாயகர்
கிராமம்/நகரம்மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : பார்வதிதேவியார் தனது பாதுகாப்புக்காக ஒரு வாலிபனைப் படைத்தாள். அவனுக்கு "கணபதி' என பெயர் சூட்டி தனது லோகத்தின் காவலுக்கு நிறுத்தி வைத்தாள். ஒருமுறை தேவர்கள் அம்பாளை தரிசிக்க வந்தனர். அவர்களை அனுமதிக்க கணபதி மறுத்து விட்டார். அவர்கள் கணபதியை மீறிச்செல்ல முயலவே,

அவர்களுடன் போரிட்டு விரட்டி விட்டார். தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவரும் கணபதியிடம் நேரில் வந்து பேசிப்பார்த்தார். சிவனையும் அனுமதிக்க கணபதி மறுக்கவே, கோபம்கொண்டது போல் நடித்த சிவன், கணபதியின் தலையை வீழ்த்தி விட்டார். இதையறிந்த பார்வதி, தன்னால் உருவாக்கப்பட்ட கணபதிக்கு மீண்டும் உயிர்கொடுக்கும்படி வேண்டினாள். சிவன் அவருக்கு யானையின் தலையைப் பொருத்தி முழு முதல் பொருளாக்கினார். தான் உட்பட யாராக இருந்தாலும் தன் மைந்தன் கணபதியை வணங்கியபிறகே பிறரை வணங்க வேண்டும் என்றார். விநாயகரை கணங்களுக்கெல்லாம் அதிபதியாக்கினார்.

சிவன், கணபதியின் தலையை வீழ்த்தியதை உணர்த்தும்விதமாக விநாயகர், இங்கு தலையில்லாமல் மொட்டை கணபதியாக அருளுகிறார்


திருவிழா : விநாயகர் சதுர்த்தி
சிறப்பு : மொட்டை விநாயகர்
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இப்பகுதியில் உள்ள டாக்டர்கள் பலர், ஆபரேஷன் செய்யும் முன்பு இவருக்கு தேங்காய் காணிக்கை செலுத்திவிட்டே பணியைத் துவக்குகின்றனர்.


பிரார்த்தனை : கல்வியில் சிறப்பிடம் பெற, வியாபாரம் விருத்தியடைய இவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.


நேர்த்திக்கடன் : விநாயகருக்கு அருகம்புல் மாலை, வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு : வியாபாரிகள் தினமும் தங்களது தொழிலை தொடங்கும் முன்பு கடைச்சாவியை இவரிடம் வைத்து பூஜை செய்து விட்டு செல்கின்றனர். இவ்வாறு செய்வதால் தமது தொழில் சிறப்பதாக அவர்கள் நம்புகின்றனர். எனவே, இவர் "வியாபார பிள்ளையார்' என்றும் அழைக்கப்படுகிறார்.புதிதாக ஏதேனும் செயலைத்தொடங்கும்போது சீட்டு மூலம் உத்தரவு கேட்கும் முறையும் இங்குள்ளது.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு மொட்டை விநாயகர் திருக்கோயில், கீழமாசி வீதீ, மதுரை-625 001


மதுரை - மதுரை அமைவிடம் - மதுரை அருகில் உள்ள ஆலயங்கள் - மதுரை ஆட்சியாளர்கள் - மதுரை கண்ணகி - மதுரை காமாட்சி - மதுரை கூடலழகர் - மதுரை கோயில் தொடர்புக்கு - மதுரை சிறப்பு விழாக்கள் - மதுரை சிறப்புக்கள் - மதுரை சுற்றுலா - மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி - மதுரை தெருக்களுக்கு தமிழ் மாதப் பெயர்கள் - மதுரை தேவார பதிகம் - மதுரை நவநீத கிருஷ்ணர் - மதுரை பல்கலைக்கழகம் - மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் - மதுரை பேச்சியம்மன் - மதுரை மதனகோபாலசுவாமி - மதுரை மத்தியபுரி நாயகி - மதுரை மீனாட்சி கோவில் நேர அட்டவனை - மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயிலின் அமைப்பு - மதுரை மீனாட்சியம்மன் கோயில் வரலாறு - மதுரை மீனாட்சியம்மன் கோவில் - மதுரை மொட்டை விநாயகர் - மதுரை வரலாறு - மதுரை வழிகாட்டி - மதுரை வீரராகவப்பெருமாள் - மதுரை ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி -