HolyIndia.Org
Holy India Org Add New Temple

மதுரை கூடலழகர்

இறைவன்கூடலழகர்
இறைவிமதுரவல்லி (வகுளவல்லி, வர குணவல்லி, மரகதவல்லி)
தல மரம்கதலி
தீர்த்தம்ஹேமபுஷ்கரிணி.
புராண பெயர்திருக்கூடல்
கிராமம்/நகரம்மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : வைகுண்ட ஏகாதசி , நவராத்திரி
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என்ற "திருப்பல்லாண்டு' பாடல் இயற்றப்பட்ட தலம் மதுரை. இவ்வூரில் கூடலழகர் என்ற பெயரில் பெருமாள் அருளுகிறார். மார்கழி மாதத்தில் இத்தலத்தை தரிசிப்பது சிறப்பு. அஷ்டாங்க விமானம் : பெருமாள் கோயில்களில் 96 வகையான விமானங்கள் அமைக்கப்படும். இதில் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் தருவதாகக் கருதப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதிலுள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை. மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் வகையில் ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜ கோபுரம், எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில் எட்டு பிரகாரங்களுடன் அமைந்த கோயில் இது. ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகம், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், மணவாள மாமுனிகள், விஸ்வக்ஷேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமிநாராயணன், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. சூரிய மண்டலத்தில் சூரியன் அஷ்டாங்க விமானத்துடன் கூடிய ரதத்தில் வலம் வருவார். இந்த ரதத்தின் மாதிரி சிற்பம் கோயிலின் சுற்றுச்சுவரில் வடிக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியறிவிற்காக பிரார்த்தனை செய்கிறார்கள்
நேர்த்திக்கடன் : இங்கு தாயாருக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
பாடியவர்கள் : பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மங்களாசாஸனம்

அடியோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

-பெரியாழ்வார்


முகவரி : அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை - 625 001 மதுரை மாவட்டம்


மதுரை - மதுரை அமைவிடம் - மதுரை அருகில் உள்ள ஆலயங்கள் - மதுரை ஆட்சியாளர்கள் - மதுரை கண்ணகி - மதுரை காமாட்சி - மதுரை கூடலழகர் - மதுரை கோயில் தொடர்புக்கு - மதுரை சிறப்பு விழாக்கள் - மதுரை சிறப்புக்கள் - மதுரை சுற்றுலா - மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி - மதுரை தெருக்களுக்கு தமிழ் மாதப் பெயர்கள் - மதுரை தேவார பதிகம் - மதுரை நவநீத கிருஷ்ணர் - மதுரை பல்கலைக்கழகம் - மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் - மதுரை பேச்சியம்மன் - மதுரை மதனகோபாலசுவாமி - மதுரை மத்தியபுரி நாயகி - மதுரை மீனாட்சி கோவில் நேர அட்டவனை - மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயிலின் அமைப்பு - மதுரை மீனாட்சியம்மன் கோயில் வரலாறு - மதுரை மீனாட்சியம்மன் கோவில் - மதுரை மொட்டை விநாயகர் - மதுரை வரலாறு - மதுரை வழிகாட்டி - மதுரை வீரராகவப்பெருமாள் - மதுரை ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி -