HolyIndia.Org
Holy India Org Add New Temple

மகாபலிபுரம்


இறைவன்ஸ்தலசயனப்பெருமாள்
இறைவிநிலமங்கைத் தாயார்
தல மரம்புன்னை மரம்
தீர்த்தம்புண்டரீக புஷ்கரணி
புராண பெயர்திருக்கடல் மல்லை
கிராமம்/நகரம்மகாபலிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : வைகுண்ட ஏகாதசி
சிறப்பு : பூதத்தாழ்வார் அவதார தலம், பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. உற்சவப்பெருமாள் கையில் தாமரை மொட்டுடன் நிற்கிறார்.இங்குள்ள பெருமாள் தன் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார்.
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாமல்லபுரம் சிறந்த கடற்கரை நகரமாக விளங்கியது. இங்கு பல்லவர் கால சிற்பங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது. இங்கு மூலவர் சன்னதியின் கீழ் உள்ள விமானம் கனகாகிருதி விமானம் எனப்படுகிறது. புண்டரீக மகரிஷி இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.
பிரார்த்தனை : திருமணத்தடை நீங்க இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன் : பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்யலாம்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்


பாராய துண்டு மிழ்ந்த பவளத் தூனை படுகடலில் அமுதத்தைப் பர்வாய்க்கீண்ட சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புனர் மருதமிற நடந்த பொற்குன்றினை காரானை யிடர் கடிந்த கற்பகத்தைக் கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.

-திருமங்கையாழ்வார்


முகவரி : அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் கோயில் மகாபலிபுரம் - 603 112 காஞ்சிபுரம் மாவட்டம்