HolyIndia.Org
Holy India Org Add New Temple

புஞ்சை


இறைவன்நற்றுணையப்பர்
இறைவிபர்வத ராஜபுத்திரி, மலையான் மடந்தை இரண்டு அம்மன்
தல மரம்செண்பக, பின்ன மரம்
தீர்த்தம்சொர்ண தீர்த்தம்
புராண பெயர்திருநனிபள்ளி
கிராமம்/நகரம்புஞ்சை
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் பிறந்த தலம். சம்பந்தர் தன் தந்தையின் தோள் மீது அமர்ந்து இத்தலத்தை பாடியுள்ளார்.

அடியார்களின் வேண்டுகோளுக்கிணங்க பாலையாயிருந்த இத்தலத்தை நெய்தலாக பாடினார்.


திருவிழா : ஆண்டு தோறும் சித்திரை 7 - 13 வரை சூரிய பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷம் மற்றும் சிவனுக்குரிய அனைத்து வழிபாடுகளும் செய்யப்படுகிறது.
சிறப்பு : இத்தலத்து இறைவன் சுயம்பு லிங்கம் அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் சித்திரை 7 - 13 வரை சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது.
திறக்கும் நேரம் : காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : கோயில் மூலஸ்தானமும், கோயில் மண்டபங்களும் சிறந்த சிற்ப வேலைப்பாடுடன் அமைந்துள்ளது.

அத்துடன் "நனிபள்ளி கோடி வட்டம்' என்ற மண்டபம் மிகவும் அருமையாக கோயில் சுற்றுப்பகுதியில் பிரமாண்டமான தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், பிரம்மா, லிங்கோத்பவர், மனைவியுடன் சண்டிகேஸ்வரர் உள்ளனர். அமைக்கப்பட்டுள்ளது.

ராஜராஜசோழனின் மூதாதையர் பராந்தக சோழனால் இத்தலம் கட்டப்பட்டது.


பிரார்த்தனை : திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாணசுந்தரரை வணங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், நற்றுணையப்பரை வணங்கினால் செல்வ செழிப்பு, குழந்தைகளின் படிப்பு சிறக்கும் என்பதும் நம்பிக்கை.
நேர்த்திக்கடன் : சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தல சிறப்பு : மூலஸ்தானத்திற்கே யானை வந்து வழிபட்ட தலம் என்பதால் இத்தலத்தின் கருவறை மிகவும் பெரியதாக அமைந்துள்ளது. இங்கு பர்வதராஜபுத்திரி, மலையான்மடந்தை என்ற திருநாமத்தில் இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர்.

விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம். எனவே இங்கு சுவாமியின் வலது பக்கம் அம்மன் வீற்றிருக்கிறார். இது தவிர தனி சன்னதியில் மூலஸ்தானத்திலேயே அம்மனுடன் கல்யாணசுந்தரேஸ்வரர் அருளுகிறார்.

காவிரிநதி இங்கு வந்து கிழக்கு முகமாக வந்து மேற்கு முகமாக திரும்பி செல்கிறது. இதனை பஸ்வமாங்கினி என்பர்.

அகத்தியரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தை விநாயகர் தட்டி விட்டதால் அவருக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க விநாயகர் இங்குள்ள குளத்தில் நீராடி வழிபாடு செய்துள்ளார். இதனால் இத்தலம் "பொன்செய்' ஆனது. இதுவே காலப்போக்கில் மருவி "புஞ்சை' ஆனது.

பெரும்பாலான கோயில்களில் எருமைத்தலையின் மீது நின்ற கோலத்தில் அருளும் துர்க்கை, இத்தலத்தில் கையில் மான் மற்றும் சிங்கத்துடனும், சும்பன், நிசும்பனை சம்ஹாரம் செய்த கோலத்திலும் அருளுகிறார்.


பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே அஞ்செழுத்து ஓதில் நாளும் அரனடிக்கு அன்பதாகும் வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த நஞ்சமும் அமுதாக்கு வித்தா நனிபள்ளி யடிகளாரே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 43வது தலம்.


முகவரி : அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை (திருநனிபள்ளி), கிடாரங்கொண்டான் போஸ்ட- 609 304 நாகை மாவட்டம்.