HolyIndia.Org
Holy India Org Add New Temple

பரமேஸ்வர விண்ணகரம்


இறைவன்பரமபதநாதர்(வைகுண்ட பெருமாள்)
இறைவிவைகுந்தவல்லி
தீர்த்தம்ஆயிரம் தீர்த்தம்
புராண பெயர்பரமேஸ்வர விண்ணகரம்
கிராமம்/நகரம்பரமேஸ்வர விண்ணகரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், வைகுண்ட ஏகாதசி.
சிறப்பு : பெருமாளின் திவ்யதேசங்கள் 108ல் ஒன்று,
திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இத்தல பெருமாள் அமர்ந்த, சயன, நின்ற கோலத்தில் அஷ்டாங்க (முகுந்த) விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். 

மணல் பாறையில் செய்யப்பட்ட இக்கோயில் சுவாமி கருவறை, முதல் பிரகாரம் ஆகியன குடவறையாக உள்ளது. இக்கோயில் மும்மாடக்கோயில் எனப்படும்.முன்மண்டபத்தில் கிழக்கு பார்த்து தாயார் தனிச்சன்னதியில் இருக்கிறார். பிரகாரத்தில் இணைந்திருக்கும் இரண்டு மரங்களுக்கு கீழே ஆதிசேஷன் இருக்கிறார்.


பிரார்த்தனை : இங்கு வேண்டிக்கொண்டால் பாவங்கள் நீங்கி, வைகுண்ட பதவி அடையலாம், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன் : சுவாமிக்கு சர்க்கரைப் பொங்கல், அவல், தயிர்சாத நைவேத்யங்கள் படைத்து நெய் தீபம் ஏற்றலாம்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
முகவரி : அருள்மிகு வைகுண்ட பெருமாள் சுவாமி திருக்கோயில், பரமேஸ்வர விண்ணகரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்