HolyIndia.Org
Holy India Org Add New Temple

பரமத்திவேலூர் நன்செய் இடையாறு


இறைவன்எயிலிநாதர் ( திருவேலிநாதர்)
இறைவிசுந்தரவல்லி
தல மரம்வன்னிமரம்
கிராமம்/நகரம்பரமத்திவேலூர் நன்செய் இடையாறு,
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : பஞ்ச பாண்டவர்களில் பலசாலியான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் நன்செய் இடையாறில் உள்ளது. பீமன் மிகவும் பலம் மிக்கவன் என கருதிக்கொண்டிருந்தான். தன்னைவிட இந்த உலகில் வலியவர்யாருமில்லை என சொல்லித்திரிந்தான். அவன் நல்லவன் ஆயினும் இந்த ஆணவம் அவனது புகழை குறைத்தது. அவனுக்கு புத்தி புகட்ட திருமால் செய்த ஏற்பாட்டின்படி சிவபெருமான் புருஷாமிருகம் என்ற ஒன்றை ஏவினார். இது மனித உடலும், மிருக தலையும் கொண்டது.

அந்த மிருகத்தின் சக்தியின் முன் பீமனால் நிற்க முடியவில்லை. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, "கோவிந்தா, கோபாலா' என கதறிக்கொண்டே ஓடினான்.

சிவபெருமானின் அருளால் அந்த மிருகத்திடமிருந்து தப்பினான். சேர்வராயன்மலையில் உற்பத்தியாகி பாயும் திருமணி முத்தாற்றின்கரையோரத்தில் உள்ள ஐந்து இடங்களில் சிவ பூஜை செய்தான். அங்கே சிவபெருமான் எழுந்தருளினார். சேலம் சுகவனேஸ்வரர், உத்தமசோழபுரம் கரபுநாதர், பில்லூர் வீரட்டேஸ்வரர், பரமத்திபீமேஸ்வரர், நன்செய் இடையாறு திருஎயிலிநாதர் கோயில்களே அவை.


திருவிழா : மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், நால்வர், நந்திதேவர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன. இவ்வூர் மக்களுக்கு திருமணம் நடத்த இலவசமாக திருமண மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன் : சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு : சுயம்புலிங்கம் எனப்படுவது தானாகவே தோன்றுவதாகும். இறைவன் தானாகவே விரும்பி அமர்ந்த இடங்கள் சில உண்டு. இவ்வகையில் ஐந்து சுயம்பு லிங்க தலங்களை சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தரிசிக்கலாம். இவற்றில் முக்கியமானது பரமத்திவேலூõர் அருகிலுள்ள நன்செய் இடையாறு எயிலிநாதர் கோயில் ஆகும்.

காவிரி ஆற்றுக்கும், அதன் கிளை நதியான திருமணிமுத்தாற்றுக்கும் இடையே அமைந்த செழிப்பான ஊர் என்பதால் "நன்செய் இடையாறு' என்ற காரணப் பெயர் இந்த தலத்திற்கு ஏற்பட்டது. கோயில்கள் நிறைந்த புண்ணிய பூமி இது. ஊரைச்சுற்றி பெருந்தெய்வ, சிறுதெய்வ கோயில்கள் உள்ளன. இந்த கோயிலின் சுற்று மதிலுக்குள்ளேயே சீனிவாச பெருமாள் கோயிலும் உள்ளது.

ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் வழிபட்டால் பாவங்கள் நீங்கி முக்தி உண்டாகும். இக்கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல் வெட்டு சான்று உள்ளது.

பழம்பெருமை வாய்ந்த இந்த கோயில் கி.பி.10ம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில், பரமத்திவேலூõர் நன்செய் இடையாறு - 637207 நாமக்கல் மாவட்டம்.