HolyIndia.Org
Holy India Org Add New Temple

நிலாதிங்கள்துண்டம்


இறைவன்நிலாத்துண்டப்பெருமாள்
இறைவிநேர்உருவில்லாவல்லி
தீர்த்தம்சந்திர புஷ்கரணி
புராண பெயர்நிலாத்திங்கள் துண்டத்தான்
கிராமம்/நகரம்நிலாதிங்கள்துண்டம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : சந்திரனின் ஒளி பெற்றவர் என்பதால் இங்கு பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள் விசேஷம்.
சிறப்பு : சிவாலயத்துக்குள் இருக்கும் இந்த சன்னதி பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று. இத்தலத்தில் மகாலட்சுமி பெருமாளின் நாபிக்கமலத்தில் (தொப்புளில் இருந்து கிளம்பும் தாமரை) இருந்தபடி அருளுகிறாள். நாபிக்கமலம் பிரம்மாவிற்கு உரிய இடம் என்பதால், இவ்விடத்தில் லட்சுமியை பிரம்மாவின் அம்சத்துடன் இருப்பதாக கருதலாம். இந்த அரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு என்பார்கள்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலத்தில் பெருமாள் அருள்பாலிப்பது சிறப்பு
பிரார்த்தனை : பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தோல் வியாதிகள், வயிறு சம்பந்தமான நோய்கள், தோஷங்கள் நீங்கும், உடல் உஷ்ணம் குறையும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வேண்டிக்கொண்டால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பதும், தாய், பிள்ளை இடையே பாசப்பிணைப்பு அதிகமாகும் என்பதும் நம்பிக்கை
நேர்த்திக்கடன் : பெருமாளுக்கு சாம்பிராணி தைலக்காப்பு செய்து விசேஷ பூஜைகள் செய்து அன்னதானம் செய்யலாம்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும் காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய் பெருமானுன் திருவடியே பேணினேனே.

-திருமங்கையாழ்வார்


முகவரி : அருள்மிகு நிலாத்துண்டப்பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள்துண்டம் காஞ்சிபுரம் 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்