HolyIndia.Org
Holy India Org Add New Temple

நாதன்கோயில்


இறைவன்ஜெகநாதன், விண்ணகரப்பெருமாள், நாதநாதன்.
இறைவிசெண்பகவல்லி
தல மரம்செண்பக மரம்
தீர்த்தம்நந்தி புஷ்கரிணி
புராண பெயர்நந்திபுர விண்ணகரம்
கிராமம்/நகரம்நாதன்கோயில்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : வைகுண்ட ஏகாதசி
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில், மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர்.
திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இத்தல இறைவன் மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சிதருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் மந்தார விமானம் எனப்படுகிறது. நந்தி, சிபிசக்கரவர்த்தி ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.
பிரார்த்தனை : திருமணத்தில் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று கூட, குழந்தை பாக்கியம் பெற, வழக்குகளில் சாதகமான தீர்ப்பு பெற, நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் சிறந்த பலன் உண்டு.
நேர்த்திக்கடன் : பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

உம்பருலகேழும் கடலேழும் மலையேழும் ஒழியாமைமுனநாள் தம்பொன் வயிறாரளவுமுண்டு அவையுமிழ்ந்த தடமார்வர் தகைசேர் வம்புமலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பிமணி கங்குல் வயல்சூழ் நம்பன் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணுமனமே.

-திருமங்கையாழ்வார்


முகவரி : அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில், நாதன் கோயில் என்ற நந்திபுர விண்ணகரம்-612 703 தஞ்சாவூர் மாவட்டம்.